பக்கம்:தரும தீபிகை 5.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. கொடுமை 1575 கொடியவர் தியவர் பாவிகள் எனப் பாழ்பட்டுள்ளவர் யார்? பொல்லாத புன்மைகளில் பழகிப் புலேபடிந்தவரே எல்லா வகைகளிலும் இழிந்து ஈனமாய் எள்ளல் அடைந்துள்ளனர். உருவ நிலையில் ஒன்றுபோல் தோன்றினும் இனியவர் தனி மகிமை எய்தி நிற்கின்ருர், கொடியவர் நெடிய பாவிகளாய் கிலே குலேந்துழல்கின்ருர். கற்பூரம் போலக் கடல்உப் பிருந்தாலும் கற்பூரம் ஆமோ கடலுப்பு-பொற்பூரும் புண்ணியரைப் போல இருந்தாலும் புல்லியர்தாம் புண்ணியர் ஆவாரோ புகல். (நீதிவெண்பா'38) உருவகிலையில் ஒத்திருந்தாலும் புல்லியர் புண்ணியரைப் போல் கண்ணியம் அடையார் என இது உணர்த்தியுள்ளது. உள்ளத்தில் நல்ல பண்புகளுடையவர் மேலான நிலைகளை யே எண்ணி மேன்மை அடைந்து வருகின்ருர், புல்லர் அவ்வா றின்றிக் கீழான வழிகளிலேயே இழிந்து பாழாயழிக் து போகி ன்ருர். அவர் மெய்யராப் உயர்ந்து கெய்வகதியை அடைகின் ருர், இவர் மையல் மயக்கங்களில் ஆழ்ந்து வெப்ய துயரங்களில் அழுந்தி எ வ்வழியும் உய்தியின்றி புழல்கின்ருர். நெஞ்சகம் உருகும் தன்மை நீடறி வுடையார்க்கு அன்றி வஞ்சகர் திறத்தும் உண்டாம் என்னினும் ஒவ்வார்; மாதர் அஞ்சன விழியால் உள்ளம் அறிவிலார் குழைவர் ஈசன் தஞ்செனும் அருட்கண்நோக்கால் தம்முளம்கரைவர்சான்ருேர். (மெயஞ்ஞானவிளக்கம்) நல்ல மேலோர் இறைவனைக் கருதி உள்ளம் உருகுவர்; புல் விய கீழோர் மாகரை நினைந்து மறுகி உழலுவர் என இது குறித் துள்ளது. மேன்மையும் கீழ்மையும் ஒருங்கே உணர வந்தன. உயர்ந்த நினைவுகளை புடையவர் த்கமராப் உயர்கின்ருர்; இழிந்த புலேகளை எ ண்ணியுழல்பவர் பித்தராப்ப் பிழைபட்டழி ~ : - - --- 2--ெ = m. * = 軒 கின்ருர். படிந்த நினைவின்படி பலன்கள் விளைந்து வருகின்றன. மனத்தின் அளவே மனிதன் என்றது இனத்தின் இயல்பு தெரிய வந்தது. கான் எதனைச் சார்ந்ததோ அதன் வண்ணமாய் உயிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/36&oldid=1326593" இலிருந்து மீள்விக்கப்பட்டது