பக்கம்:தரும தீபிகை 5.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76. அ. ர சு 1899 னிடம் பொங்கி வரும்; சீவர்கள் யாவரும் அவனைப் போன் போடு புகழ்ந்து யாண்டும் போற்றி வருவர். “வையகம் மூழுவதும் வறிஞன் ஒம்பும் ஒர் செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்ருன்." (இராமா, அரசியல், 12) தசரதச் சக்கரவர்த்தி வையத்தைக் காத்து வந்த வகையை இது காட்டியிருக்கிறது. உவமானக் காட்சி பொருளைத் தெளிவா விளக்கி உணர்ச்சிக்கு ஒளியூட்டி யுள்ளது. எளிய ஒரு குடியா னவன், மனைவியும் நான்கு குழந்தைகளும் உடையவன்; ஒரு எக்கர் கிலமே அவனுக்கு உரிமையா யிருக்கது; அதில் விளைந்து வருவதைக்கொண்டுதான் கன் குடும்பத்தை அவன் நடத்த வேண்டும் ஆதலால் அதனை எந்த வேளையும் செவ்வையாக் கவ னித்தான். நன்கு உரம் இட்டு உழுது பண்படுத்திப் பருவம் பார்த்து விதைத்து நீர் பாய்ச்சிக் களைகளை நீக்கிப் பயிர்களே வளர்த்துப் பட்டி முதலிய கெட்டது யாதும் புகாமல் பாது காத்து நெல்லை நிறைய விளைத்து இல்லை இனிது பேணி வந்தான். அதுபோல் வையகம் முழுவதையும் தசரதன் செவ்வையா ஒம்பி ஆட்சி செய்து வந்தான் என்க. செல்வ வளங்கள் கிறைக்க அரசர் பெருமானை வறிஞைேடு ஒப்பவைத்துப் பாதுகாப்பின் பண்பாடுகளை விளக்கியிருக்கும் நுட்பம் உய்த்துணரத் தக்கது. நாட்டைப் பாதுகாப்பதிலேயே தன் காட்டத்தைச் செலுத்தி வருபவனே நல்ல அரசன் ஆவான். தேசமக்கள் சிறந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்து வரப் Կն க் து வருவதே உயர்ந்த ஆட்சியாம். ககக 757 வான்வழங்கி வந்தாலும் மண்விளைந்து தந்தாலும் கோன்விளங்கி நீதிமுறை கோலாமல்-தான்விழைந்த வண்ணம் புரியினே வையமெலாம் வெய்யதுயர் உண்ண உளையும் உயிர். (எ) இகள். வானம் பருவ மழைகளைப் பொழிக்தாலும், மாநிலம் மிகுதியான விளைவுகளைத் தந்தாலும் அரசன் இங்கே நெறியோடு அமர்ந்து நீதிமுறை புரியாமல் பொறி வெறியனுப்க் கோது படிந்திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/360&oldid=1326926" இலிருந்து மீள்விக்கப்பட்டது