பக்கம்:தரும தீபிகை 5.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮠ90Ꮾ த ரும தீ பி. கை அறிவும் சிலமும் உள்ள மேலோர்களாலேதான் ஞாலம் மேன்மை பெற்று வருகிறது. அத்தகைய கல்லோரைப் பேணி வரும் அளவே அரசன் நீதி முறை செய்தவனகின்ருன். கருமம் கற்பு தவம் முதலிய புனித நீர்மைகள் இனிது பெருகி வர, மாந்தர் யாவரும் யாண்டும் சுகமாய் வாழ்ந்து வர ஒர்ச்து முறை செப்பவனே உண்மையான வேங்களுப் ஒளி மி கு க் து கிற் கின்ருன். இடர் நீக்கி இன்பம்புரிவதே இறையின் கடமையாம். 'எந்த 蠶 கொந்தவர் துயர்கேட்டு இடர் இல் பவன் தனது ஏக மைந்தனே எனினும் வதைத்திட ஒல்கான்; மாக்களின் சுகாலம் அன்றிச் சிந்தனே மற்ருேர் பொருளினில் செலுத்தான்; தி மொழி கனவிலும் புகலான்; தந்தைபோல் தாய்போல் எவரையும் ஒம்பும் தன்மையனே இறை அன்ருே?" (நீதி நூல்) உண்மையான அரசின் கலயை இது உணர்த்தியுள்ளது. பரிபாலன முறையில் மன்னர் மன்னியிருந்துள்ள துறை களை இங்காட்டு இறைமையாளர் சரிதங்கள் பல காட்டியுள்ளன. உதய குமரன் என்பவன் சோழ நாட்டு மன்னன் மகன். நல்ல அழகன், மணிமேகலையைவிழைந்து மையலாய் உழக்கான். ஒரு நாள் இரவு அவளே காடிச் சென்ருன்; அங்கனம் செல்லுங் கால் சோரன் என்று மாறுபாடாப் எண்ணிக் காஞ்சனன் என்னும் விஞ்சையன் அவனே வெட்டி வீழ்த்தினன். அவன் கொலையா யிறந்து பட்ட நிலையை அரசனிடம் வந்து ஒர் மறை யவன் சொன்னன். அவ்வுரையைக் கேட்டதும் நெடுமுடிக் கிள்ளி என்னும் அம்மன்னன் பாதும் வருக்காமல் தீதுசெய்தவன் செத்தது நல்லதே எ ன்று சிங்தை துணிந்திருக்கான். தனது அரு மை மகன் இறந்தான் என்று கவலாமல் நீதி முறையை அவன் கினைந்து நின்றதை உலகம் உவந்து கொண்டாடி வந்தது. இள வரசனது இழவு கேட்ட பொழுது விழுமிய அவ் வேந்தன் விளம்பி நின்றது வியந்து சிக்திக்கத்தக்கது. அரிய அந்த மன நிலை பெரிய அதிசய நிலையாயுள்ளது. அயலே வருவது காண்க, 'யான் செயற் பாலது இளங்கோன் தன்னேத் தான்செய் ததல்ை தகவிலன் விஞ்சையன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/367&oldid=1326933" இலிருந்து மீள்விக்கப்பட்டது