பக்கம்:தரும தீபிகை 5.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1912 த ரும தீ பி. கை இனிய அரசின் பெருமையையும் இன்னத மன்னனின் இழிவையும் இது விழி தெரிய விளக்கி யுள்ளது. தனக்கு உரிய நீர்மையைத் தழுவியுள்ள அளவே எவரும் சீர்மை பெறுகின்ற னர். தன்மை ஒழியின் புன்மை புகுந்து புலையுறுகின்றனர். பெண்ணுக்குக் கற்பு பெரு மேன்மை கருதல் போல் அரசுக்கு நீதி முறை அதிசய மேன்மைகளை அருளி வருகின்றது. கிறையின் ங்ேகிய மகளிர் ர்ேமையும், பொறையின் நீங்கிய தவமும், பொங்கு அருள் துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசின் முந்துமோ? (இராமாயணம்) கற்பு இல்லாத மகளிர், பொறுமை இல்லாத தவம், அருள் இல்லாத அறம், நீதி முறை இல்லாத அரசு ஆகிய இவை அவல மாயிழிவுறும் எனப் போதித்துள்ள இது ஈண்டு ஒதி ஓதி உணர த்தக்கது. அரசன் முறை நீங்கினல், அரிவையர் கிறை நீங்குவர்; தவம் பொறை நீங்கும், அறம் அருள் நீங்கும்; ஆகவே அவ கேடுகளுக்கெல்லாம் அவனே பூரணமான காரணன் ஆகின்ருன். அளிசெய்து காவா அரசனும், ஆன்ற ஒளிசெய்து கோலோ உறுவனும்--களிசெய்து காமுற் றுழலும் கடையனும் என்றுமே தோமும் அறுழல்வர் துயர். அரசன் அளிபுரிந்து காவான் ஆயின் அவன் ஒளி யிழந்து இழிவான் என்பதை இகளுல் உணர்ந்து கொள்கிருேம். தோம்=குற்றம். தன் கடமையை உணர்ந்து கருணை தோய்ந்து மன்னன் மாநிலத்தைக் காத்து வரவேண்டும்; காவல் பிழை படின் அவன் பழியடைந்து பாழ்படுவதோடு உலகமும் இழி வடைந்து காழும் ஆதலால் பாதுகாப்பில் எவ்வழியும் அவன் மேதையா யிருக்கவேண்டும். உரிய காப்பே இனிய ஆட்சியாம். புரவலன், காவலன் என அரசனுக்கு அமைந்திருக்கும் பெயர்கள் அவனது இயல்பான பாதுகாப்பு கிலையை உயர்வாக உணர்த்தியுள்ளது. உயிரினங்களை உரிமையோடு நன்கு ஒம்பி வரும் அளவே அவன் எங்கும் மேன்மை பெற்று என்றும் வென்றியாளனப் விளங்கி எவ்வழியும் நிலைத்து வருகின்றன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/373&oldid=1326940" இலிருந்து மீள்விக்கப்பட்டது