பக்கம்:தரும தீபிகை 5.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1914 த ரும தீ பி. கை அரசன் நீதிமுறை வழுவினல் விளையும் கேடுகளை இது விளக்கி யுள்ளது. உரிய கருமம் தவறிய பொழுது கருமம் விலகுகிறது; அது விலகவே பாவம் வருகிறது; பாவம் வரவே மழை பெய்யா மல் ஒழிகிறது; அது ஒழியவே பயிர்கள் பாழாகின்றன; அவை பாழாகவே உணவு முதலியன இழந்து உயிர்கள் நாசம் அடை கின்றன. இந்த நாசங்களுக்கெல்லாம் மூல காரணம் அரசனது நெறிகேடே ஆதலால் பழி பாவங்கள் பாவும் அவனையே சேர் கின்றன. கோல் ஒன்று கோடின் கொடுமைகள் கோடியாம். கோள்கிலே திரிந்து நாழி குறைபடப் பகல்கள் மிஞ்சி ணிேலம்மாரி இன்றி விளைவுஅஃகிப் பசியும் டிேப் பூண்முலே மகளிர் பொற்பிற் கற்பழிந்து அறங்கள் மாறி ஆணேயின் உலகு கேடாம் அரசுகோல் கோடின் என்ருன். (சீவகசிந்தாமணி) தற்பாடு பறவை பசிப்பப் பசையற நீர்சூல் கொள்ளாது மாறிக் கால்பொரச் சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ மழைகால் ஊன்ரு, வளவயல் விளேயா; வாய்மையும் சேட்சென்று கரக்கும்; இது தரப் பிறவும் எல்லாம் நெறி மாறு படுமே கடுஞ்சினக் கவை இய காட்சிக் கொடுங்கோல் வேந்தன் காக்கும் நாடே. (ஆசிரியமாலை) வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பும்; ஏந்திழையார் தம்கற்பும் இல்லறமும் கில்லாவாம்; மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து பாக்தள் முடிகிடந்த பாரின் விளைவு அஃகுமால். (பிரமோத்தரகாண்டம்) மன்னன் முறை புரியாமல் மதிகேடனப் மாறி நின்ருல் இன்ன வா.ற கேடுகள் விளைந்து விடும் என இவை வரைந்து காட்டி யுள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கக் கக்கன. அரசுக்கும் உலகுக்கும் உள்ள உரிமைத் கொ டர்புகள் இங்கே நயமாக் கெரிய வந்தன. உரியவன் சரியாயிருந்தால் உயர்வுகள் உளவாம். மழைவுளம் சுரங்து நிலவளங்கள் நிறைந்து குடி சனங்கள் பல வழிகளிலும் உயர்ந்து இனிய சாப் வாழ்ந்து வருவன எல் லாம் அரசனுடைய நெறியான ஆட்சி முறையினலேயாம். அக்க ஆட்சி பிழைபடின் காட்சி பழுதுபட்ட கண்போல் மனித சமுதாயம் மருண்டு மயங்கி இருண்டு கலங்கி எங்கும் மங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/375&oldid=1326942" இலிருந்து மீள்விக்கப்பட்டது