பக்கம்:தரும தீபிகை 5.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1919 உணர்ந்து கலைமையுடன் ஆராய்ந்து வினைபுரிந்து வரின் மாந்தர் மேலான கலங்களை அடைந்து யாண்டும் மகிழ்ந்து வருவர் என்க. உலக நிலைகளை ஒர்ந்து யாண்டும் நிலை குலையாமல் ஒரு தேசத்தை ஆண்டு வருவது அரிய பெரிய செயல். அத்தகைய ஆட்சியைச் செய்ய வுரிய அரசன் இளமையிலேயே கலைகள் பலவும் கற்றுக் கலை சிறந்த அறிவாளியாய் நிலை யுயர்ந்து கிற்க வேண்டும். கல்வி யறிவு நன்கு அமையாதவன் ஒரு நாட்டுக்கு அரசய்ை வரின் அங்காடு பல வகையிலும் இழிந்து புலைபடிந்து போம். மடமையான தலைமை கொடுமையான புலையாம். கல்வி அறிவு இல்லையானல் ஒளியிழக்க கண்போல் அவ்வுள் ளம் இளிவடைந்தே கிற்கும்; ஆகவே அவனல் யாதொரு நன் ம்ையும் செய்ய முடியாது. பொல்லாக புலைகளில் படிந்து அல் லல்களே செய்வன் ஆதலால் அவனுடைய நாட்டில் உள்ள மக் கள் கொடிய புலி எதிர்ப்பட்ட புல்வாயினங்கள் போல் நெடிய துயர்களை யடைந்து யாண்டும் கிலைகுலைந்து வருந்துவர். கல்லா அரசனும் காலனும் நேர்ஒப்பர்; கல்லா அரசனில் காலன் மிகநல்லன்; கல்லா அரசன் அறம்.ஒரான் கொல் என்பான் கல்லாரைக் காலன் கணுகிகில் லானே. (திரும், o ம்) கல்லாக அரசன் காலனிலும் பொல்லாகவன் எனக் காரணத்தை விளக்கிக் காட்டிக் திருமூலர் இவ்வாறு உரைத்திருக்கிரு.ர். பல வகையான மக்களைப் பாதுகாத்து வரவுரிய அரசன் நீதிநூல் முதலிய கலைகளை நன்கு கெரிந்திருக்கபோதுதான் எங்கும் அவன் இசைபெற்று நிற்பன். அறிவு கலம் சரியா யில்லையாயின் வெறி யனப் நிமிர்ந்து வெய்ய துயரங்களையே செய்ய நேர்வன். அரசன் கல்வியறிவுடையனயின் கற்றவர்களை நன்கு மதித் துப் பேணுவன்; அவரும் அவனுக்கு உற்ற துணையாய் நின்று உறுதி கலங்களை உகவியருளுவர். அவன் கல்லாதவன் ஆயின் பொல்லாத புல்லர்களையே துணையாகச் சேர்ப்பன். அந்தச் சேர்க்கை நாட்டுக்குக் கொடிய கேட்டை விளைத்து விடும். கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லே கிலக்குப் பொறை. (குறள், 570)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/380&oldid=1326947" இலிருந்து மீள்விக்கப்பட்டது