பக்கம்:தரும தீபிகை 5.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு. 1921 'காடுகெழு செல்வத்துப் பிடிகெழு வேந்தே! கினவ கூறுவல் என வ கேள்மதி! அறம்புரிங் தன்ன செங்கோல் நாட்டத்து முறைவேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் ருேரே, ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ மாக விசும்பின் நடுவுகின் ருங்குக் கண்பொர விளங்குகின் விண்பொரு வியன்குடை வெயில் மறைக் கொண்டன் ருே அன்றே வருந்திய குடிமறைப்பதுவே கூர்வேல் வளவ! வெளிற்றுப் பனம் துணியின் விற்றுவிற்றுக் கிடப்பக் களிற்றுக் கணம்பொருத கண்ணகன் பறந்தலே வருபடை தாங்கிப் பெயர்புறத்து ஆர்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே; மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்கும்.இக் கண்ணகன் ஞாலம்; அது நன்கு அறிந்தனே ஆயின் நீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருகர் பாரம் ஒம்பிக் குடிபுறந் தருகுவை ஆயின் கின் அடிபுறங் தருகுவர் அடங்கா தோரே.” (நாகனர்) பெருமை பொருத்திய வேங்கே! உனக்கு வேண்டிய லெ உறுதிகலங்களை எனக்குத் தோன்றிய அளவு சொல்லுகின் றேன்; செங்கோல் கருமதேவதைக்கு கிலேயமானது; அதனைத் தாங்கியிருக்கின்ற அரசன் அரிய பல பண்பாடுகளில் ஒங்கி யிருக்க வேண்டும்; குடிசனங்கள் வந்து கன்பால் முறையிட்ட பொழுது அவர் பால் அன்பு கூர்ந்து ஆதரவு புரிவதே ஆட்சியா ளர்க்குச் சிறந்த மாட்சியாம்; யார்க்கும் எளிய செவ்வியளுப் இதம் புரிந்து வருகிற அரசன் மழை பெப் என்ருல் உடனே பெய்யும், உழு கொழில் புரியும் உழவர்கள் விழுமிய செல்வங் களைப் பெருக்கி நாட்டை வளம்படுத்தி வருபவர் ஆதலால் அவரை எவ்வழியும் உரிமையோடு பேணி வருவது நல்லது: அரசன் ஆதரவாப்க் கருதிவரும் அளவே வளங்கள் பெருகி 241

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/382&oldid=1326949" இலிருந்து மீள்விக்கப்பட்டது