பக்கம்:தரும தீபிகை 5.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1922 த ரும தீபிகை வரும்; மழை பெய்யாது மாறினும், விளைவுகள் குன்றினும், பஞ் சங்கள் தோன்றினும், வேறு விபரீதங்கள் விளையினும் அரசனை யே உலகம் இகழ்ந்து பழிக்கும்; அரசன் நல்ல நீதியுடையன யின் அல்லலான துேகள் யாதும் அடையாது என்று உலகம் உறுதியாய்க் கருதியிருத்தலால் ஏதேனும் துயரங்கள் நேர்க்க போது வேங்கனை அது வெறுத்து வைய நேர்கிறது; ஆதலால் அரசர் பெரும! தலைமையான நிலையிலுள்ள உன் பொறுப்பை நீ குறிப்போடு நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்; கோளும் இச்சகமும் பேசும் கொச்சை மாக்களை யாண்டும் கூடாமல் மதிநலமுடைய மேலோர்களையே எவ்வழியும் உரிமையாய்த் தழுவிக் கொண்டு செவ்விய நீதி முறைகளைத் துறைகள்தோறும் ஆராய்ந்து நீ செய்துவரின் பகைவரும் திசைநோக்கித் தொழுது உன் அடி நிழலை அடைய வருவர்; நெடிய புகழ் நிலவி வரும்” எனப் புலவர் இவ்வாறு வளவனுக்குப் போதித்திருக்கிரு.ர். ஆயிரத்தெண்னு று ஆண்டுகளுக்கு முன்னர் இக் காட்டி லிருந்த ஒரு கவிஞர் அரசனுக்கு இப்படி நீதி முறைகளை அறி வுறுத்தி யிருப்பது கருதி யுனா வுரியது. கவி வேந்தருடைய பொருள் மொழிகளுக்குச் செவி சாய்த்துப் புவி வேந்தர் Р–G42 வலன்போடு அவரைத் தழுவி வந்துள்ள் உரிமையையும் பழங் காலத்து கிலேமையையும் ஒரளவு இகளுல் உணர்ந்து கொள்கி ருேம் புலவர்களை இனிது மருவி அரசுகள் பொலிவடைந்தன. 1. ஆட்சி முறையில் உயர்ந்து செல்வ வளங்களில் நிறைந்து அறிவு சிலங்களில் சிறந்து இக்காடு முன்னுள் எங்கும் பொங்கிய புகழோடு நன்கு விளங்கி யிருந்தது. இந்நாள் மங்கி மறுகியுளது. நாடுகின்ற வளங்களெலாம் நாடாமல் தந்தருளி நயந்து வந்து கூடுகின்ற பேர்க்கெல்லாம் குறிப்பறிந்து பல பொருளும் கொடுத்து நாளும் டுேகின்ற புகழ்ஒளியால் கிலவி வந்த இந்தியா இன்று கைந்து பாடுகின்ற பாட்டெல்லாம் பஞ்சமாய்ப் பட்டினியாய்ப் படிந்த அந்தோ!. (1) சீனத்தார் திருவடையத் தெண்கடலின் முத்து அளித்தாய்! செர்மன் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/383&oldid=1326950" இலிருந்து மீள்விக்கப்பட்டது