பக்கம்:தரும தீபிகை 5.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு 1927 தின் தலைமையான குறிக்கோளா யிருக்க வேண்டும்' என நெப்போலியன் என்னும் விர மன்னன் இவ்வாறு கூறியிருக்கிருன். சனங்களுக்கு உரிமையாய் உதவி செய்துவரின் அந்த ஆட்சி உறுதியாய் உயர்ந்து வருகிறது. உரிய இகம் ஒழியின் அரிய பெரிய அரசும் வலியிழந்து மெலிதாய் இழிந்து படும். “No government is ultimately strong, but in proportion to - its kindness and justice.” (Buskin) 'அரசாட்சிக்குத் தனியே பாதும் வலியில்லை; குடிசனங்க ளுக்கு ஆதி வாய் நீதி புரிந்து வரும் அளவே அது வலியடைக் துள்ளது” என்று ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் குறித்திருக்கிருர் காட்டுக்கு நன்மை புரிந்து வருந்தோறும் அரசுக்கு வன்மையும் வனப்பும் நன்கு வளர்ந்து வருகின்றன. 764. கற்றுப் பெரிய கலைஞய்ை கின்ருலும் உற்ற அறிவை உயர்கிலேயில்-ஒற்றிகின்று வெற்றி நலன்கள் விளையா தொழியுமேல் எற்றும் இழிவே எழும். (r) இ-ள். ■ அரிய பல நூல்களைக் கற்றுப் பெரிய கலைஞனய் கின்ரு அம் தனது அறிவை உயர் நிலையில் பண்படுத்திக் காரியசித்தி களை விளையாத ஒழியின் அந்த அரசன் சிறந்து விளங்கான்; எவ்வழியும் இழிவுகளையே கண்டு அவமே அழிவான் என்க. இது வேங்கலுக்கு வினைத்திட்பம் வேண்டும் என்கின்றது. உலகத்தை ஆள வந்தவன் உயர்ந்த எண்ணங்களை யுடைய குயிசைந்திருப்பது இயற்கை நியமமாப் கின்றது. தலைமை தாங்க நேர்ந்த பொழுது அந்த மனிதனுடைய கிலைமை ஓங்கி எழுகின்றது. அவனுடைய முன்னிலையில் எவரும் காமாகவே அடங்கி ஒழுக நேர்கின்றனர். அரசனது காட்சி அரிய மாட்சி யாப் அதிசய ஆட்சிகளைச் செய்கின்றது. உருவத்தோற்றத்தால் இவ்வாறு ஒளி பெற்றுள்ள அரசன் தெளிவான அறிவுடைய ய்ைச் சிறந்து திகழின் அரிய பல மேன்மைகள் விளைந்து வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/388&oldid=1326955" இலிருந்து மீள்விக்கப்பட்டது