பக்கம்:தரும தீபிகை 5.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உலோபம் 1595 "கன்கையிலுள்ள பணம் போய்விடும் என்றே பயல் மானம் கெட்டு மழுங்கி யிருக்கிருன்' என வையம் அவனை எள்ளலாக வைதே வரும். எவ்வழியும் பிசுனன் இழிவே அடைகின்ருன். உத்தம குணங்கள் எல்லாம் உலோபத்தால் ஒழிந்து போமே என்றதனுல் அதன் ஈனமும் இழிவும் தெளிந்து கொள்ளலாம். 'உளப்பரும் பிணிப்புரு உலோபம் ஒன்றுமே அளப்பரும் குணங்களே அழிக்கு மாறுபோல் கிளப்பரும் கொடுமைய அரக்கி கேடிலா வளப்பரு மருதவைப்பு அழித்து மாற்றிள்ை." (இராமா, தாடகைவதை 42) தாடகையை உலோபத்தோடு ஒப்பவைத்துக் கம்பர் இங்க னம் பாடியிருக்கிருர். இனிய குளிர் நிழல்களையும் அரிய கனி களையும் எவ்வழியும் உதவிவந்த செவ்விய நல்ல சோலைகள் பல வற்றை வெவ்விய அரக்கி ஒருத்தி நின்று அழித்து ஒழித்தாள்; அந்த அழிவுநிலை உயர்ந்த குணநலங்களை எல்லாம் உலோபம் ஒன்று கின்று நாசப்படுத்துவது போல் இருந்தது என இது உணர்த்தியுள்ளது. உலோபத்தின் புலையும் நிலையும் புன்மையும் சேமும் இதல்ை இனிது உணரலாகும். உலோபம் கொல்லவரும் காய்போல் குலைக்கும். என்றது உலோபியின் பொல்லாத புலை தெரிய வந்தது. பொருள்மேல் கடும்பற்றுக் கொண்டிருப்பவன் ஆதலால் உலோ பியிடம் யாரேனும் போய் ஏதேனும் கேட்க சேர்ந்தால் அவன் உள்ளம் துடிக்கிறது; துடிக்கவே உருத்துக் கொதிக்கின்ருன்; கடுத்துப் பேசுகின்ருன், எள்ளி இகழ்ந்து எவரையும் அயல் ஒதுக்கித் தன் பொருளை அவன் காத்து நிற்கின்ருன். 'பாட்டைநான் பாடிப் பயன்நாடிப் போயினேன் வேட்டைநாய் போல்சிறி விண்குலைத்தான்-நாட்டம் தெரியாமல் சென்றேன் தெரிந்து தெளிந்து பரியாமல் வந்தேன் படிந்து.' மனிதன் என்று மதித்து நான் போனேன்; அவன் சாப் போல் சீறி வந்தான்; வரவே உண்மை தெரிந்து பாதும் வருக்கா மல் உடனே திரும்பிவந்தேன் என ஒரு உலோபியிடம் உதவியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/56&oldid=1326613" இலிருந்து மீள்விக்கப்பட்டது