பக்கம்:தரும தீபிகை 5.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1618 த ரும தீ பி. கை பலருக்கும் மறைவாகும்; மாடுரைஞ்சிடும்; மலம் பன்றிகட்கு உபயோகமாம்; கதமிகு கடாஎன்னில் உழுது புவிகாக்கும்; வன் கழுதையும் பொதி சுமக்கும்; கல்எனின் தேவர்களும் ஆலயமுமாம்; பெருங் கான்புற்றும் அரவ மனேயாம்; இதமிலாச் சவமாகிலும் சிலர்க்கு உதவிசெயும் இழிவுறு குரங்காயினும் இரக்கப் பிடித்தவர்க்கு உதவி வரும்; வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும்; மதமது மிகும்பரம லோபரால் உபகாரம் மற்ருெருவருக்கும் உண்டோரி' (குருபாததாசர்) கல் ஆலயமாம், தேவரும் ஆம்; கழுதை கசடர் பொதிசுமக்கும்; கடாவோ உழுதுபயிரிடம்காம்; கட்டம் பன்றிக்கு இரையாகும்; புல்ன்று ஈசர் வாகனமாம்; பொதியும் சுமக்கும்; பிணம் எனிலோ பூசிமுடித்து மறையோர்க்குப் பொருளே சந்து புகழ் எய்தும், மல்லார் குட்டிச் சுவர் எனிலோ மாடும் உரைஞ்சும், மறைவாகும் மதியாத் துடைப்பம் தானெனிலோ மாடகூடங்களேவிளக்கும்; அல்லா உலுத்தன்.தனக்கினேயாயாரை உரைப்பேன்புவிமீதில் அவனேக்குறித்துக்கூறுமிடத்து அவனுக்கு அவனே சரிதானே. (இராமச்சந்திர கவிராயர்) இந்த உலகிலுள்ள எந்தப் பொருளும் ஏதேனும் பயனு டையதாம்; உலோபி பாத்திரம் யாதொரு வகையிலும் பயன் படாதவன் என இவை உணர்க்கியுள்ளன. பாழான அவனது இழி நிலை விழி கெரிய வந்தது. பொருள் மயக்கால் மயங்கி மருள் மண்டி யிருக்கலால் உலோபனை யாரும் திருத்த முடியாது, யாண்டும் அவமே நீண்டு எவ்வழியும் கசையாய் வசைபடிக்கே நிற்பன். "தேன்கொண்ட துளிஒன்றில்ை ஏழு கடலெலாம் தித்திக்க வேசெய்யினும் செய்யபூ மலரினல் வச்சிரம்தன்னேச் சிதையவே பொடி செய்யினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/79&oldid=1326636" இலிருந்து மீள்விக்கப்பட்டது