பக்கம்:தரும தீபிகை 5.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. உ. லோபம் 1623 முன் நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொ ருளை வினே செலவழிப்பதும் கவருன வழிகளில் கள்ளுவதும் குற்றமாம், புகழ் புண்ணியம் என்னும் நிலையான உயர்ந்த பொருள்களுக்குக் கன் பொருளைத் தகுந்த வகையாகத் தந்து மாற்றிக் கொள்ளின் அவன் தெளிந்த மதிமானப்ச் சிறந்து உயர்க்க சமர்க்களுப் விளங்கி நிற்கின்ருன். பிறர்க்குக் கொடுத்தால் கன்பொருள் குறைந்து போம் என்றே எவரும் அஞ்சுகின் ருர், இந்த அச்சம் உலோபியிடம் உச்ச நிலையில் ஓங்கி நிற்கிறது; ஆகவே ஈதலை அவன் சாகலைப் போல் எண்ணி நடுங்குகிருன். ஈ என்று சிறு பறவையின் பேரை யாரேனும் சொல்ல நேர்ந்தாலும் நேரே தன்னைக் கொல்ல சேர்ந்தது போல் அவன் உள்ளம் துடிக்க நேர்கின்றது. ஈகின்றவனே வள்ளல் என்றும், ஈயாதவனே உலோபி என் ஆறும் சொல்லுகின்றனர். ஈகையாளனே உலகம் புகழ்ந்து போற் அறுகிறது, ஈயாதவனே எவரும் இகழ்ந்து தாற்றுகின்றனர். 'ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன எட்டிமரம் காயா திருந்தென்ன காய்த்துப் பலன் என்ன?” என இன்னவாறு காய்ந்து உலோபரை வையம் வைது வருகிறது. வசையுடையவர் வசவுகளை அடைய நேர்ந்தனர்.

உலோபி உள்ளத்தில் திடம் இல்லாதவன்; பேடி போல் பிழை நிலையில் உள்ள வன்; கொடுக்கால் பொருள் குறைந்து போம்; அது போனுல் எழையாய் வருக்க நேரும் என்னும் கொடிய அச்சமும் கெடிய திகிலும் அவனுடைய நெஞ்சில் என்றும் குடி கொண்டுள்ளன; ஆகவே அவன் யாருக்கும் ஏதும் ஈயாமல் இறுகப் பற்றி நிற்கிருன்’ என ஒரு மானச தத் துவக் கலைஞன் ஒர் அரச சபையில் கூறிஞன். அங்கே யிருந்த பெரியவர் ஒருவர் வள்ளலும் அவ்வாறு உள்ளம் வெருவியே பிறர்க்கு உதவி செய்கிருன் என உரைத்தார். அரசன் திகைத்து "அது எப்படி?” என்று வினவினன். பெரியவர் விளக்கினர்: பொருள் குறைந்து அழிந்துபோம் என்று பயங்கே உலோபி கொடாதிருக்கிருன், வள்ளல் உள்ளத்திலும் அந்தப் பயம் உள் ளது: "பொருள் நிலையில்லாதது; விரைவில் அழியும் இயல்பினது; அது நம் கையை விட்டுப் போகுமுன்னரே பைய அதனைப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/84&oldid=1326641" இலிருந்து மீள்விக்கப்பட்டது