பக்கம்:தரும தீபிகை 6.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2024, த ரு ம தீ பி ைக ஒரு தாளின் மிசைகின்று கின்றதாளின் ஊருவின்மேல் ஒரு தாளே ஊன்றி ஒன்றும் கருதாமல் மனம் அடக்கி விசும்பின் ஒடும் கதிரவனேக் கவர்வான்போல் கரங்கள் நீட்டி இருதரரை கெடுந்தடங்கண் இமையாது ஒரா யிரம்கதிரும் தாமரைப்போது என்ன நோக்கி கிருதாதி யரின் மனுவாய்த் தவம்செய் வாரின் நிகர்.இவனுக்கு ஆர்கொல் என நிலை பெற்ருனே. (1) கருந்து அகல் எனக்கருதிப் பிடியும் கன்றும் களிற்றினமும் உடனுரிஞ்சக் கறையான் ஏறிப் பொருந்துமுழைப் புற்றதெனப் புயங்கம் ஊரப் பூங்கொடிகள் மரன் என்று பாங்கே சுற்றப் பரிந்துவெயில் நாள் மழைநாள் பனி நாள் என்று பாராமல் கெடுங்காலம் பயின்ருன் மண்ணில் அருந்தவமுன் புரிந்தோரில் இவனேப் போல் மற்று ஆர்புரிந்தார் சிவசிவ வென்றரிய வாறே. (2) பாரதம், அருச்சுனன் தவநிலை, 58, 41) விசயன் புரிந்துள்ள தவகிலையை இதில் வியந்து நோக்கி உவந்து கிற்கிருேம். எவ்வளவு மனத்திண்மை யிருந்தால் இவ் வளவு உறுதி யோடு ஒரு முகமாய் ஊன்றி நிற்க முடியும்? என் பதை ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். சத்திரிய விறு வெற்றியான வினையாண்மைகளோடு ஈண்டு விளங்கி நிற்கிறது. கலைகள் பல பயின்று உலக நிலைகளை ஒர்ந்து உண்மைகளை ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து கொள்வது தெளிவு என வந்தது. தலைமை அதிகாரமும் திருவின் போகமும் செல்வ வளங்களும் பெருகியுள்ளமையால் அை மதியும் பணிவும் அரசனிடம் அமைந்து வருதல் அரிதாம். உள்ளத் தாப்மையும் அறிவுத் தெ ளிவும் அமைதியும் அமையின் அவை பேரின்ப நிலையங்களாம். சிறந்த பெருங்கன்மைக்கு அடையாளம் சித்த சாந்தியே. எதையும் கிதானமாக ஆராய்ந்து நிலைமைகளை உணர்ந்து நீதிகளை ஒர்க் து கொள்வது அரசனுக்கு உயர்ந்த பண்பாடாய் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/101&oldid=1327481" இலிருந்து மீள்விக்கப்பட்டது