பக்கம்:தரும தீபிகை 6.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2026 த ரும தீ பி. கை நல்ல எண்ணங்களால் தன்னை நன்கு உயர்த்திக்கொள்ளுகிறவன் எல்லா நன்மைகளையும் ஒருங்கே அடைந்து ஒளி மிகுந்து கி ம் கின்ருன். புல்லிய மாசுகளை நீக்கி நல்ல தேசுகளை வளர்த்து வருகிற அரசன் தன்னையும்காட்டையும் தெய்விகநிலையில்உயர்த்தி வருகிருன். உற்ற ஆட்சி உயர்வதே கொற்றவன் மாட்சியாம். உலகத்தை ஆளும் தலைமையோடு உதித்து வந்துள்ளமை யால் அறிவு நலங்களையும் நீதி முறைகளையும் நெறியே பயின்று துறைதோறும் தெளிந்து வேந்தன் நேரே உயர்ந்துகொள்கிருன். “ The superior man raises himself continually in intelligence and in power of judgment. ” [Confucius] "நீதி முறையிலும் அறிவிலும் நாள்தோறும் கன்னே உயர்த்திக் கொள்ளுகிறவன் உயர்க்க தலைவனுகின்ருன்’ என்னும் இது இங்கே அறிய வுரியது. தலைமை தகுதியால் நிலைபெறுகிறது. நெறியான நீதி மன்னனே எல்லாரும் பிரியமாப் புகழ்நது போற்றுவர். சிறந்த கீர்த்திகள் உயர்ந்த தன்மைகளால் உளவா கின்றன. நீர்மையாளனை உலகம் உவந்து வாழ்த்தி வருகிறது. 'குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச் செல்லிசை நிலைஇய பண்பின் i. நல்லியக் கோடன்.” (சிறுபாண்) பிறரிடம் நில்லாமல் செல்லுகின்ற புகழைக் கன்னிடம் கிலைத்து கிற்கும்படி செய்த பண்பினன் எனக் கோடன் என்னும் குறு கில மன்னனை இது குறித்துள்ளது. சல்ல ப ண் பு க ள் தோய்ந்து எல்லாரும் இன்புற ஆய்ந்து புரிந்து நலம் பல பெறுக.

=

793 கரிபரிதேர் ஊர்ந்துவந்து காட்சி தருதல் அரியணையில் வீற்றிருந் தாய்தல்-உரிய பருவம் தவருமல் பார்த்துவினே செய்து வருவ தரசின் வகை. (க) இகள் யானே குதிரை தேர்களை ஊர்ந்து சீரோடு உலாவருதல், குடிகளுக்கு எளிதே காட்சி கருதல், அரியணையில் அமர்ந்து நீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/103&oldid=1327483" இலிருந்து மீள்விக்கப்பட்டது