பக்கம்:தரும தீபிகை 6.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1934 தரும பிேகை காடோஅம் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு. (குறள், 520) அரச காரியங்களைச் செய்து வரும் அதிகாரிகளை அரசன் சாளும் நன்கு கவனித்து வந்தால் தேசம் முழுவதும் செம்மை யாப் கடந்து வரும் எனத் தேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். துகத்தில் பூட்டிய மாடுகளைக் கவனித்து ஒட்டினல் வண்டி சரியாயப் ஒடும்; அது போல் கருமத்தில் காட்டிய கலைவர்களைக் கருத்தோடு செலுத்தி வந்தால் ஆட்சித்தேர் எ வ்வழியும் மாட்சி யாய்ச் சிறந்து விளங்கி வரும். தகுதியான அறிஞர்களைத் தேர்ந்து தெளிந்து அவரைத் துறைகள் தோறும் முறையே நிறுவி அரசன் சதரோடு முறை செய்து வந்தால் அந்த நாடு எந்த வகையிலும் சிறந்து எல்லா வளங்களும் நிறைந்து விளங் கும். கரும வீரர்களான அரசியல் நிபுணர்களைச் சரியாக ஆள வேண்டியிருக்கலால் அ | ச ன் பெரிய அறிவாளியாயிருக்க வேண்டும். சிறந்த அறிவுதான் மனிதனை உயர்ந்த நிலையில் உயர்த்தியருளுகிறது. அதன் ஒளிவழியே வாழ்வு வளமுறுகிறது. “ Knowledge has its seat in the head; it is the eye of desiro, and can become the pilot of the soul. ’’ (Plato) ' அறிவு கலேமை யாய் நின்று மனித விருப்பத்தை விழுமி தா கிறை வேற்றும் விழி போல் உள்ளத; உயிர் வாழ்வு துயர் உருகபடி நல்ல வழி காட்டியாப் அது அமைந்து கிற்கிறது ” எனப் பிளாட்டோ என்னும் கிரீஸ் தேசத்த'ப் பெரியார் இவ் வாறு கூறியிருக்கிருர் அறிவு பனிதனுக்குச் செய்து வருகிற மாட்சியைக்கத்துவகோக்கோடு இது உய்த்துணரச் செய்கிறது. இக்ககைய அறிவை அரசன் உரிமையாகப் பெற்றிருந்தால் எத்தகைய நிலையிலும் அவன் உத்தமனப் உயர்ந்து விளங்கு வான். தன் ஆட்சிக்கு உரிய அறிவாளிகளைச் சரியாக அமைத் துக் கொள்வதிலேயே அவனுடைய மாட்சிகள் யாவும் மருவி கிற்கின்றன. உற்ற துணை வெற்றி வினையாகிறது. கற்றவரைக் கண்ணுகக் கைதழுவி என்றது கல்வியறிவு டைய நல்ல அறிவாளிகளை அருமை பாராட்டி உரிமையோடு தழுவிக் கொண்டால் அந்த அரசு விழுமிய நிலையில் ஒங்கி வரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/11&oldid=1327383" இலிருந்து மீள்விக்கப்பட்டது