பக்கம்:தரும தீபிகை 6.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2056 த ரு ம தீ பி ைக அவர் பால் விழுமிய நிலையைக் கருதி மரியர்தையாய் யாரும் ஒழுகுகின்றனர். பிறப்புரிமையில்சிறப்புகள் பெருகிவருகின்றன. அளேயுறை பாம்பும் அரசும் நெருப்பும் முழையுறை சீயமும் என்றிவை நான்கும் இளைய எளிய பயின்றன என்று எண்ணி இகழின் இழுக்குத் தரும். (ஆசாரக்கோவை) பாம்பும் சிங்கமும் குட்டியாயிருந்தாலும், நெருப்புச் சிறி தாயிருந்தாலும் அவற்றை எளிமையா எண்ணி நெருங்கலாகாது; அதுபோல் அரசையும் கருதி ஒழுக வேண்டும் என இது காட்டி யுள்ளது. அரசு நிலையை உணர வரிசை உரிமைகள் வந்தன. சிங்கம் மிருகங்களுக்குக் கலைமையானது; பெருமிகமும் கம்பீரமும் உடையது; மிருக ராசன் எனப் பேர் பெற்றது. அரசன் மனிதருக்குத் தலைமையானவன்; வீர கம்பீரமுடைய வன்; நாாதிபன் என்று ேப ர் பெற்றுள்ளான். இத்தகைய தொகை வகையில்ை சிங்கம் அரசருக்கு உவமையாய் வந்தது. சிங்கக் குருளேக்கு இடும் தீஞ்சுவை பூனே நாயின் வெங்கட் கடுங்குட்டிக்கு ஊட்ட விரும்பிேைளா? (இராமா, நகர் 117) சிங்க ஏறு அனேய விரன். (இராமா, கங்கை, 43) இராமனைச் சிங்கக்குருளை, சிங்க ஏறு என இவை குறிக் துள்ளன. வெல்லும் விறலைக் குறிப்புகள் விளக்கி நின்றன. கொல்லும் சிங்கக் குட்டியும் போன்றிவ் வுலகு ஏத்தச் செல்லும் மன்னே சீவகன் தெய்வப் பகை வென்றே. "சிந்தாமணி 364) சிங்கக்குட்டி எனச் சீவகனே இது சுட்டியுள்ளது. “He was a lion in the fight.” (Roderick) போரில் அவன் ஒரு சிங்கம்.’’ என மேல் நாட்டாரும் விரத்துக்குச் சிங்கத்தை நேரே உவமை கூறியுள்ளனர். சின்னக் குட்டியா யிருந்தாலும் சிங்கம் பெரிய மதயானை யையும் வெல்ல வல்லது. இளைஞராய் இருந்தாலும் சிறந்த அரச குமாரர் எதிர்ந்த பகைவர் எவரையும் வெல்ல வல்லராப் வி ற கொண்டு கிற்கின்ருர். அவ் வீர நிலை நேரே தெரிய வங்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/133&oldid=1327516" இலிருந்து மீள்விக்கப்பட்டது