பக்கம்:தரும தீபிகை 6.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2058 த ரும தீபிகை வந்தார்; முதிய ஒரு கிழவன் போல் ை மு டி தரித்துக் கொண்டு அரியணையில் அமர்ந்து யாவும் ஆராய்ந்து நீதி முறை. யை நேர்மையாக் நெறியே செய்தான்; இவனது மதி யூகத்தை யும் மனநலத்தையும் வியந்து புகழ்ந்து அவர் மகிழ்ந்து சென்ருர். "உரைவுமுடிவு காணுன் இளமையோன் என்ற நரைமுது மக்கள் உவப்ப--கரை முடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.' (பழமொழி, 31) "இளமை காணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய உரவோன்.' (மணிமேகலை, 4) இவன் நியாயம் புரிந்துள்ள முறையை இவை வரைந்து காட்டியுள்ளன. வீரம் கொடை நீதிகளில் இவன் கலை சிறந்து விளங்கினன். கொடிய மதயானைகள் போல் செருக்கி நின்ற பெரிய பகைவர் அனைவரையும் அடக்கி ஒடுக்கி இளமையிலேயே இவன் வளமையாய் உயர்ந்த ஆட்சி புரிந்தது அதிசய மாட்சி யாப் கின்றது. விரத் திறலுடையவன் வியனிலையில் விளங்கி கிம்பான் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்ருன்.

==

804. வெற்றி அபிமன்முன் வில் இழந்தும் வாள்.எடுத்துக் கொற்றம் புரிந்து கொடுஞ்சமரில்-சுற்றிகின்ற மாற்றலரை வீட்டினன் மாறுவரோ வீரருளம் ஏற்றதுணை இல்லெனினும் எய்த்து. (ச) இ-ள். o தன் கையில் இருந்த வில்லை இழந்தும் விர அபிமன் யாதும் தளராமல் மூண்டு போராடி யாண்டும் அதிசய நிலையில் நீண்டு கின்ருன்; உற்றதுணைகள் பக்கத்தே இல்லை எனினும் வெற்றி விசர் எய்த்து மீளார்; விருேடு பொருது விளங்கி நிற்பர் என்க. மானம் வீரம் என்னும் இந்த இர ண்டு நீர்மைகளும் மானிட சாதிக்கு மேலான சீர்மைகளை அருளுகின்றன. ஈன நிலைகள் யாதும் அனுகாமல் தன்னை இனிது பேணி கிற்பதே மானம் என வந்தது. உயர்ந்த மனிதத்தன்மையை என்றும் கிலே கிறுத்தி வருவது என்னும் குறிப்பை இது குறிப்பாக் குறித்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/135&oldid=1327519" இலிருந்து மீள்விக்கப்பட்டது