பக்கம்:தரும தீபிகை 6.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2066 தரும தீபிகை டாள்; பிடித்திருந்த வாளை அயலே கடுத்து விசிள்ை; அந்த உடம்பை எடுத்து மார்பில் அனைத்து மகிழ்ந்தாள்; நீ பிறந்த குடியை மேன்மைப்படுத்திச் சிறந்த விர சுவர்க்கத்தை அடைந்த ஒ என் அருமை மகனே! உன்னைப் பெற்ற பேற்றை இன்று நான் முற்றவும் பெற்றேன்' என்று உள்ளம் களித்து உரைத் தாள். இந்த விரக் கிழவியின் தீரச் செயலை வியந்து நாடும் அர சும் நயந்து புகழ்ந்தன. புலவர் பாடும் புகழையும் அடைந்தாள். அயலே வருகிற கவியில் இவளது சரிதம் சுவையாக வந்துளது. "நரம்பு எழுந்து உலறிய கிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படையழிந்து மாறினன் என்று பலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலை அறுத் திடுவென் யான் எனச் சினே இக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேருகிய படுமகன் கிடக்கை காணுTஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே.' (காக்கைபாடினியார்) போர்க்களத்தில் இறந்த கிடந்த மகனைக் கண்டதும் அவனைப் பெற்ற பொழுது உண்டான மகிழ்ச்சியினும் அதிக மான உவகையைக் கொண்டாள் என்ற கல்ை இந்த விரக் தாயின் உள்ளத் திண்மையையும் உறுதி நிலையையும் கினைந்து வியந்து நெஞ்சம் களிக்கின்ருேம். தீரமான பெண்மையிலிருந்து விரமான ஆண்மைகள் மேன்மையாய் விளைந்து வந்துள்ளன. ---.

  • - பண்டைக் காலத்தில் அரச ஆட்சியோடு சிறந்து இக்காடு பீடும் பெருமையும் பெற்றிருந்த மாட்சிகளை இவை காட்சியாக் காட்டி கிற்கின்றன. குடி சனங்கள் படை வீரர்களாய் கின்று வேந்தனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தனர்; அவனும் அதிசய வீரனப் நின்று யாவரையும் உரிமையோடு ஆதரித்து வந்துள்ளான். வீரர் குடி நாட்டுக்கு வெற்றி முடியைச் சூட்டி யுள்ளது. அந்த வுண்மை இந்த வீரக் கிழவிகளின் விழுமிய சரித்திரங்களால் ஈண்டு நன்கு விளங்கி நின்றது.

கங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/143&oldid=1327527" இலிருந்து மீள்விக்கப்பட்டது