பக்கம்:தரும தீபிகை 6.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2067 806. தானம் தயைகல்வி தன்னையுணர் ஞானமென ஆனவகை வீரம் அமைவுறினும்-மானமிகு போர்வீரம் ஒன்றே புகழ்வீரம்: அன்னதே கேர்வீரம் ஆகும் கிலேத்து. (சு) இ-ள் தான விரம், தயா விரம், கல்வி வீரம், ஞான வீரம் எனப் பலவகை விரங்கள் உள. எனினும் மானம் மிகுந்த டோர்வீரமே யாண்டும் புகழ் விரமாய் உயர்ந்து நேரேநிலைத்து நிலவுகின்றது. இது, வியனை விரத்தின் நயன் அறிய வந்தது குண நீர்மைகள் வீரத்தால் மனம் அடைந்து வருகின் றன. வீரம் இல்லையானல் சிறந்த தன்மைகளும் சிதைந்து படு கின்றன. மரத்துக்கு ஆணிவேர் போல் மனிதனுக்கு «Թուք உறுதி பயந்துள்ளது. ஊக்கம் உறுதி திடம் திண்மை தைரியம் துணிவு என்பன வீரத்தின் கிளைகளாய் விரிந்து பரந்துள்ளன. தான் உறுதியாக் கைக்கொண்ட நல்ல ஒழுக்கங்களை எவ் வழியும் செவ்வையாப் பாதுகாத்து நிற்பவர் சிறந்த லே விர ராப் உயர்ந்து திகழ்கின்ருர். பிறர் மனை நோக்காமை பேராண் மை என்று தேவர் கூறியிருத்தலால் ஏக பத்தினி விரதம் அரிய பெரிய விரம் என்பது தெரிய வந்தது. பேரின்ப சாதனங்க வாய்ப் பெருமை பெற்றுள்ள கவம் யோகம் ஞானம் மோனம் வைராக்கியம் என்பன விர நீர்மையின் சாரங்களாயுள்ளன. தனது வண்மை நிலையில் யாண்டும் திண்மையாயிருந்து வந்தமையால் கன்னன் தானவீரன் என வானமும் வையமும் வாழ்த்த கின்ருன். இவனுடைய கவச குண்டலங்களைக் கவர்ந்து கொள்ள விழைந்து மாயன் இந்திரனே எவினன். அவன் ஒர் முதிய வேதியகுய் மருவி வந்தான். வஞ்சமாய் வக்க அவனை இவன் நெஞ்சம் உவந்து உபசரித்து, பெரியீர்! யாது வேண் டும்?' என்ருன். கருதி வேண்டியதைத் தர முடியுமா? என்.று அவன் கரவோடு கேட்டான், இவன் உறுதியாய்க் கருகிறேன் என்ருன். இவனது உயிர்நிலையமாயிருந்த அந்த அணிகளையே அவன் கேட்டான்; உடனே கொடுக்கான்; அங்ங்னம் கொடுக் கும்போது ஆகாயவாணி கடுத்தது. வந்துள்ளவன் இந்திரன்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/144&oldid=1327528" இலிருந்து மீள்விக்கப்பட்டது