பக்கம்:தரும தீபிகை 6.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2076 த ரும தீ பி ைக ளோடு சூழ்ந்து நின்ற கொலையாளிகளைக் கண்டும் போசன் யாதும் அஞ்சாமல் அவரை நோக்கி நீதிமொழி கூறினன் என்க. - அஞ்சாமையும் நெஞ்சத் துணிவும் அருந்திறலாண்மையும் விரத்தின் விளைவுகளாய் விளங்கி கிற்கின்றன. அச்சம் மனித னேக் கொச்சை ஆக்குகிறது; அஞ்சாமை அவனை உச்ச நிலையில் உயர்த்தியருளுகிறது. ஒச்சங்கள் ஒழிய உச்சங்கள் விளைகின்றன. உள்ளத்தில் குற்றம் உடையவரே அச்சமும் திகிலும் அடைகின்றனர். கள்ளம் கரவுகள் எள்ளல் இழிவுகளில் தாழ்த் துமே அன்றி ஏற்றம் தரா, கள்ளரிடம் சில சமையம் கானப் படுகிற துணிவு துணிவாகாது. புலி கடுவாய் ஒநாய் முதலிய காட்டு மிருகங்களிடம் தோன்.றுகிற திகிலான மூர்க்கம் போல் அவரிடம் கோரக் கொடுமை தோன்.அறுகிறது. உள்ளம் பழுதாப் இழிந்த பொழுது உயிர்ச்சத்தி ஒழிந்து போகிறது; போகவே விலங்குகள் போல் எ வ்வழியும் அவர் கலங்கி உழலுகின்றனர். பொல்லாத புலைத் துடுக்கை வீரம் என்று கூறலாகாது. நல்ல தன்மைகளிலிருந்து நேர்மையாய்த் தழைத்து வரு கிற உயர்ந்த உள்ளத்துணிவே வீரமாம். கரும நீதிகள் மருவி வரக் கருமம் புரிந்து வருவது ஆதலால் வீரம் தெய்வீக நீர்மை աոա மேவி நின்றது. சீரிய வீரம் தேவனுய்த் திகழ்கின்றது. விரனை விடம் உண்டனை விண்ணவர் திரனேத் திருவண்ணு மலையனே ஊரனே உணரார் புரம் மூன்று எய்த ஆரனே அடியேன் மறந்து உய்வனே? (தேவாரம்) சிவபெருமான வீரன் என்று அப்பர் இவ்வாறு குறித்துள்ளார். பேராசை எனும் பிணியிற் பிணிபட்டு ஒரா வினேயேன் உழலத் தகுமோ? விரா! முதுகுர் படவேல் எறியும் சூரா! சுரலோக அரங்தானே. (கந்தர் அதுபூதி) முருகப் பெருமான விரா! என்று அருணகிரிநாதர் இங்ங் னம் ஆர்வமோடு அழைத்திருக்கிரு.ர். எமனே! வா என் கிட்டே, சக்திவாள் கொண்டு உன்னை வெட்டி வீழ்த்துவேன்' என்று எமைேடு இவர் விரவாதம் கூறியிருத்தலால் இவரது ஞான தீரம் தெரிய வந்தது. வீரம் வர வெற்றி விளைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/153&oldid=1327539" இலிருந்து மீள்விக்கப்பட்டது