பக்கம்:தரும தீபிகை 6.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2088 த ரும தி பி ைக அவர் சிறந்து விளங்குவர் என இது உணர்த்தியுள்ளது. கன் னைத் தழுவி நின்றவனைக் கொடை எழுமையும் இன் புறச் செய் கிறது. கொடுப்பவனுக்கே கடவுள் எல்லாம் கொடுக்கின்ருர். கொடையே எவர்க்கும் எப்பேறும் கொடுக்கும்; நெறியிற் பிறழாத கொடையே யாரும் தன் வழியின் ஒழுகச் செய்யும்; குறைதிர்ந்த கொடையே பகையை உறவாக்கும்; குலவும் பூதம் அனைத்தினேயும் கொடையே புரக்கும் என்றுள்ளம் கொள்ளப் புகன் ருன் கவுதமனே. (காஞ்சிப்புராணம்) எல்லா இன்ப நலங்களும் கொடையால் உளவாம் என இது குறித்துளது. தரும விளைவுகளை உடையது ஆகலால் கொடை அரிய பல பகிமைகளை அருளுகின்றது. எண்ணரிய மேன்மைகள் புண்ணியத்தால் விளேகின்றன. அந்தப் புண்ணி யம் கொடையால் கண்ணியமாய் விளைந்து வருகின்றது. Generosity is a virtue of a very different complexion. [Goldsmith] 'தயாளமான கொடை பல சீர்கள் மருவிய கருமமா யுளது” என்னும் இது இங்கே அறிய வுரியது. கருபவன் கரும வானுய இருமையும் பெருமை பெறுகிருன். கொடையால் புகழ் ஒளி பரவுகிறது; புண் ணியம் பெருகுகிறது; எண்ணிய இன்ப நலங்கள் எவ்வழியும் வருகின்றன. ஈந்து பழகி இனிது வாழுக. 812 ரேலைபோல் தோன்றி கிலேயாத இவ்வுலகில் ஒரிரண் டொண்குணமே ஓங்கிகிற்கும்-தேரிலவை வீரம் கொடையாம்; விழைந்திவற்றை மேவாதார் பேரிழந்தார் ஆவர் பிறழ்ந்து. )ربع( -- இ-ள் கடலில் எழுகின்ற அலைகள் போல் உடல்கள் தோன்றி பாவும் விரைந்து மறைந்து போ கிற இந்த உலகத்தில் விரம், கொடை என்னும் இரண்டு நீர்மைகள் கான் நிலைத்து கிற்கின் றன; இவற்றைக் கழுவி நின் ருர் விழுமிய புகழோடு விளங்கி நிற்கின்ருர்; கழுவாதவர் வழுவாய் ஒழிந்து போகின்ருர் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/165&oldid=1327551" இலிருந்து மீள்விக்கப்பட்டது