பக்கம்:தரும தீபிகை 6.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2092 த ரும தீ பி. கை எவ்வழியும் கொடுத்துப் பழகுக; அது உனக்குச் செவ் விய புகழைக் கொடுத்துத் திவ்விய பதவியையும் உதவியருளும். 818. கோடிக்கு ஒருவன் கொடைக்கென்ன ஒளவைமுன் பாடி யிருக்கும் படியினல்-காடிக் கொடுத்தான் மனுவின் குலதெய்வம் ஆகி எடுத்தான் பெரும்பேர் இவண். (க) இ-ள் கோடிக் கணக்கான மக்களுள் ஒருவனே கொடையாளி யாய் வரமுடியும் என ஒளவையார் பாடியிருத்தலால் கொடை யின் அருமை தெளிவாப் நின்றது; அத்தகைய கொடையை யுடையவன் மனிதருள் தெய்வமாய் மகிமை பெறுகிருன் என் க. ஈகை இனியது; புகழ் புண்ணியங்களே யுடையது; அரிய மேன்மைகளையும் பெரிய இன்ப நலங்களையும் அருளுவது என இன்னவாறு உன்னத நிலையில் ஒளி செய்திருக்காலும் கொடை யை யாரும் எளிதா அடைய முடியாது. அதனை உரிமையாய்த் தழுவி வருபவர் மிகவும் அருமையாகவே உள்ளனர். உயிர் வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் தேவையாயிருத் தலால் மனிதன் எவ்வழியும் அதனே ஆவலோடு தேடுகிருன். அது பெருகி வரும்போது அதன்மேல் ஆசையும் மோகமும் கூடவே மருவி வருகின்றன. வரவே அதனை இறுகப் பற்றி யாதும் வெளிவிடாமல் பழியோடு படிந்து கிடக்கின்ருன், பொருளாசையால் இவ்வாறு மருள் மண்டி உழலுகிற இருளுலகத்திலே அருள் கூர்ந்து தெருளோடு பிறர்க்கு உதவி செய்வார் மிகவும் அரியர். ஏதேனும் ஒர் உதவியை சாடி யாரே லும் கன்பால் வந்தால் எந்த மனிதனும் சிங்தை கவல நேர்கின் முன்; வந்தவனே அவமதிப்பாக கடத்துகிருன்; கிங்கை மொழி களை நேரே கூறுகிருன்; வேறே குறிப்பால் இகழுகிருன். 'நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணர்; ஆயிரவர் ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றம் ஒன்று ஆற்றக் கொடுக்கும் மகன்தோன் அறும்; தேற்றப் பரப்புநீர் வையகம் தேரினும் இல்லே இரப்பாரை எள்ளா மகன்.” தகடூர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/169&oldid=1327555" இலிருந்து மீள்விக்கப்பட்டது