பக்கம்:தரும தீபிகை 6.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2094. தாக ம தி பி ைக உள்ள புலையையும் இங்கே ஒருங்கே உனர்ந்து கொள்கிருேம். கொடுப்பவன் குலமகனப் உயர்ந்தான்; கொடாதவன் இழி மகய்ைத் தாழ்ந்தான். இழிவு நேராமல் ஈந்த அளவு அவன் விழுமியோனப் உயர்ந்து மேலே விளங்கி வருகிருன். 'இல்லது நோக்கி இளிவரவு கூருமுன் கல்லது வெஃகி வினே செய்வார்.” (பரிபாடல்,10) வறியவர் வாய் திறந்து கேளா முன்னமே அவரது நிலைமை யை உணர்ந்து விரைந்து விழைந்து உதவி புரிவார் என உயர்ந்த மேன்மக்களுடைய நீர்மையை இ.த உணர்த்தியுள்ளது. இவ் வாஅ உதவுகின்றவரை உ ல க ம் எவ்வாறு உவந்து புகழ்ந்து வரும்? இதனை ஈண்டு உணர்ந்து கொள்ள வேண்டும். எளி யவர்க்கு இரங்கி ஈ ப வ ர் விழுமிய மேலோசாப் ஒளிமிகுந்து வருகிருர். உபகார நீர்மை உயர் மகிமையாய் மிளிர்கிறது. தான் ஈட்டியபொருளை நீட்டிஉதவுகிறவன் நீண்ட புகழை அடைந்து கொள்கிருன்; தி லை யா ன அக்கீர்த்தி கலையான வரையே சார்ந்துகிலவுகிறது. இட்டுவாழ்வதே இனிய வாழ்வாம். அட்டுநீர் அருவிக் குன்றத்து அல்லது வயிரம் தோன் ரு, குட்டநீர்க் குளத்தின் அல்லால் குப்பைமேல் குவளே பூ வா; விட்டுநீர் வினவிக் கேள் மின் விழுத்தகை யவர்கள் அல்லால் பட்டது பகுத் துண்பார் இப் பார்மிசை இல்லை கண்டீர்! (Z) கருங்கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணுங் காலேப் பெருங்குளத்து என்றும் தோன்ரு பிறைது.தற் பினேயனிரே! அருங்கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம் தெரியின் மண் மேல் மருங்குடை யவர்கட்கு அல்லால் மற்றையர்க்கு ஆவதுஉண்டே? (2) (சீவக சிந்தாமணி) பகுத்து உண்டலும், கொடையும் தோன்றுகின்ற இடங் களை இவை நயமாக் காட்டியுள்ளன. கவிகளைக் கருதியுணர்ந்து சுவைகளை நுகர்ந்து கொள்ளவேண்டும். அருவிபாய்கிற பெரிய மலைகளிலேதான் அரிய வயிரங்கள் தோன்றும், நீர் கிறைந்த ஏரி யிலேதான் சீரிய குவளை மலர்கள் பூக்கும்; கருங்கடலிலேதான் வலம்புரிச் ச ங் கு க ள் பிறக்கும்; அது போல் கொடையும் தவமும் உயர்ந்த குல மக்களிடையே கான் நலமான நிலையில் உளவாம் எனச் சீவக மன்னன் இவ்வாறு கூறியுள்ளான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/171&oldid=1327557" இலிருந்து மீள்விக்கப்பட்டது