பக்கம்:தரும தீபிகை 6.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2 113 சிறந்த பண்பாடுகள் நிறைக்க உயர்ந்த மேலோர்களின் நிலையை இது உணர்த்தியுள்ளத. எவ்வழியும் செவ்வையான இனிய நீர் மைகளோடு வாழ வேண்டும் என மனித சமுதாயத்துக்கு ஒரு போதனையை இளம்பெருவழுதி என்னும் மன்னன் இன்னவாறு உளம் கனிந்து நன்னயமாய் வரைந்து மொழிந்துள்ளான். அரிய தெய்வ அமுதம் பெறினும் சனியே உண்ணுகே; பிறர்க்குப் பகுந்து கொடு; முனிவு இன்றி இனியனப் கில்; பிற ாது தயரை நீக்க ஆனவரையும் அவர்க்கு உதவி செப்; புகழை விரைந்து கேடு; பழியை இகழ்ந்து விடு; அயர்வு நீங்கி உயர்வில் ஒங்குக; கனக்கு என்று குறுகிய நோக்கோடு முயலாமல் பிறர் நலமுறப் பேணி முயன்று பெருகி வாழ்; இவ்வாறு வாழின் நீ புண்ணிய மூர்த்தியாய்ப் பொலிக் து விண்னும் மண்ணும் வியந்து போற்ற விளங்குவாய்! என்று விளக்கியிருக்கும் இக் கவியின் சுவைகயைக் கருதியுணர்ந்து உளங்கொண்டு நுகர்ந்து உறுதி யோடு ஒழுகிவரின் விழுமிய மேன்மைகள் கெழுமி வரும். வானம் கைம்மா.அறு கருதாமல் உலகிற்கு மழையைப் பொழிகிறது; அதுபோல் உதவி புரிபவர் வானவராய் உயர்ந்து திகழ்கின்ருர். செய்யும் இகம் தெய்வ அமுதமா 2 யப்தி புரிகிறது. ஈ கையால் உயிர்கள் உவகையுறுகின்றன; சீவர்களுடைய அந்த உள்ளக் களிப்பு கருமமாய்ப் பெருகி ஈந்தவனை நோக்கி வருகின்றன; வரவே இருமை யினும் இன்பமூர்த்தியா ப் அவன் மருவி மகிழ்கின்ருன். அரிய சுகம் இனிய உதவியில் விளைகிறது. ஈந்து வந்தார் பேரின்பம் சேர்ந்து உவந்தார் என்றது ஈகை யால் விளையும் மகிமை மாண் புகளையும் இன்ப நிலைகளையும் ஒருங்கே ஒர்ந்து உணர்ந்து கொள்ள வந்தது. பிறர் உவந்து வர ஒம்பி வருபவன் உயர்ந்த பதவியை விரைந்து அடைந்து கொள் கிருன். துயர் நீங்க உதவுதலால் உயிர் ஒங்கி உயர்கிறது இரங்கி உதவின் இமையோர் இறங்கி வரம்பெற வைப்பர் வளமா ய்-உரம்பெற்றும் ஈயா தொழியின் இருமை எதிரிழந்து பேயா யிழிவர் பிறழ்ந்து. கருணையோடு in யிர்களைப் பேணிச் சாதுக்களுக்கு உண்டி கொடுத்து வரின் அந்த உபகாரியைத் தேவர்கள் கண்டு மகிழ் 265

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/190&oldid=1327578" இலிருந்து மீள்விக்கப்பட்டது