பக்கம்:தரும தீபிகை 6.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 118 த ரு ம தீ பி ைக அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (குறள், 72; ஈயாதவரது இயல்பையும் ஈகின்றவாது உயர்வையும் இது ஒருங்கே காட்டியுள்ளத. ஒரு புருவுக்காகச் சிபி மன்னன் உடம்பை அறுத்தக் கொடுக்கான். முதுகின் எலும்போ டு ததிசி உயிரையும் கொடுத்தார். கன்பால் வந்து இந்திரன் என் பை வேண்டிய பொழுத அன்புடைய இம் முனிவர் கூறிய இனிய மொழிகள் அரிய பொருளுடையன; பெரிய உணர்வு கலங்கள் நிறைந்தன; யாவரும் அறிய வுரியன; அயலே வருகின்றன. ததீசி உரைத்தது. நாய் நமது என நரிநமது எனப் பிதா தாய் நமது என கமன் தனது எனப் பிணி பேய் நமது என மனம்மதிக்கும் பெற்றிபோல் ஆய்கமஅ எனப்படும் யாக்கை யாரதே? (1) விடம்பயில் எயிற்றர வுரியும் வி.நுழை குடம் பையும் தான் எனுங் கொள்கைத் தேகொலாம் கடம்பயில் கூத்தரின் நடிக்கும் ஐவர் வாழ் உடம்பையும் யான் என உரைக்கற் பாலதோ ? (2) நடுத்தயா விலார்தமை கலியத் துன்பநோய் அடுத்த யாவரும் திரு வடைய யாக்கையைக் கொடுத்து ஐயா அறம்புகழ் கொள்வனே எனின் எடுத்த யாக்கையின் பயன் இதனின் யாவதே. (5) (திருவிளே யாடல் உடம்பு எடுத்த பயன் பிறர்க்கு உதவி புரிவதே, அறமும் புகழும் அழியா இன்பமும் அகளுல் உளவாகின்றன என முனிவர் மொழியால் இங்கே தெளிவாய் அறிந்து கொள்கிருேம். தன் நலமே கருதி உண்டு களித்து உடலைக் கொழுக்கச் செய்து வருபவன் உயிர்க்கு ஒரு பயனும் காணுமல் ஊனம்ாப் ஒழிந்து போகின்ருன், வளர்த்து வந்த உடல் சுடலைத் தீயில் எரிந்து பிடி சாம்பலாப்க் கடிது மறைகிறது; ஈயாமல் ஈட்டி வைத்த பொருள் அயலாரிடம் சிக்கி மயலாப் மறைந்து போ கிறது. போக்கை நோக்கி உணர்பவர் புலைசீங்கி உயர்கின்(?ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/195&oldid=1327583" இலிருந்து மீள்விக்கப்பட்டது