பக்கம்:தரும தீபிகை 6.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2034 த ரு ம தீ பி ைக ஒத்தமூ வுலகத் தோர்க்கும் ஓங்கிய உவகை ஒரின் தத்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார். பன்னெடுங் காலம் நோற்றுத் தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற பின்னெடுங் கணவன் தன்னேப் பெற்றிடை பிரிந்து முற்றும் தன்னெடும் பீழை நீங்கத் தழுவினுள் தளிர்க்கை நீட்டி கன்னெடும் பூமி என்னும் கங்கைதன் கொங்கை ஆர். (2) (இராமா, திருமுடிசூட்டு படலம்) இந்தக் கவிகளைக் கருதிக் கானுங்கள்; பொருள் நிலைகளைத் துருவி நோக்கி உரிமையேடு ஒர்ந்து உணருங்கள். சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடைமை, மக்கள் ஆட்சி, குடியரசு என இந்நாளில் பெரிய ஆரவாரமாய்ப் பேசி வருகிற படிநிலைகள் எல்லாம் இந்த முடியரசு எதிரே அடிசாய்ந்து வீழ்ந்துள்ளன. ஒவ்வொரு மனிதனும் மணி மகுடம் தரித்த மன்னனப் மகிழ்ந்து வாழ இ ர | ம ன் மன்னி இருந்துள்ளதை உன்னி யுணர்ந்து உவகை மீக் கூர்கின்ருேம். அங்கப் புண்ணிய மூர்த்தி யை எண்ணி வியந்து இன்பம் மீதுார்கின்ருேம். மாட்சிமையு டைய மகிமையான அக்க இனிய வாழ்வை எந்த ஆட்சியில் காண்பது? இதனை ஈண்டு நன்கு சிந்தனை செய்ய வேண்டும். அரசன் புனிதம் நிறைந்த புண்ணியவானப் அ ைம ந் த பொழுது அந்த நாடு இன்பபோகங்கள் யாவும் சுரங்க புண்ணிய லோகமாய்ப் பொலிந்து விளங்குகிறது. அங்கே வாழுகின்றவர் சுவர்க்க வாசிகள்போல் எவ்வழியும்சுகமாய்ச் சுகித்து வருகிரு.ர். சிறந்த நீதி முறையான உயர்ந்த ஆட்சிக்கு அடையாளம் எல்லாரும் இனியராய் உயர்ந்து இன்பமா வாழச் செய்வதே யாம். அரசின்அன்பும்ஆதரவும் இன்பவாழ்வை அருளுகின்றன. “Morality is kindness to the weak.” (Jesus)

  • நீதிநெறி என்பது ஏழைகளுக்கு இரங்குவதே என ஏசுநாதர் இவ்வாறு செவ்விய அருளோடு கூறியிருக்கிரு.ர்.

“Morality is the bravery of the strong.” (Nietzsche) 'பலசாலிகளுக்குத் தைரியமாயிருப்பதே நீதிமுறை ' என நீட்சே என்பவர் நியாயநிலைக்கு இங்கனம் பொருள்குறித்துளார். “Morality is the effective harmony of the whole.” [Plato]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/211&oldid=1327601" இலிருந்து மீள்விக்கப்பட்டது