பக்கம்:தரும தீபிகை 6.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2038 காக ம தீ பி. கை எவ்வழியும் இனித இருக்க சேர்க்கான்; அவனிடம் பிழை சிறிது நேரினும் துயர் மிகவும் பெருகிப் பழிகள் பரவிவிடும் என்க. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து அளவளாவி வாழ்ந்து வரும் இயல்பு மனித இனத்திடம் தலைமையாய் அமைந்திருக்கிறது. எ.றும்பு முதலிய சிறிய பிராணிகளிடமும் இந்த நிலைமை மருவி யுள்ளதை யாண்டும் கண்டு வருகிருேம். சுற்றம், உறவு, கிளை என்னும் மொழிகள் மனிதனுடைய பக்கச் சூழல்களை நன்கு விளக்கிவருகின்றன. புடைசூழ்ந்துள்ள தொடர்புகளின்படியே எவனும் நடை தோய்ந்து வெளியே தெளிவோடு திகழ்கிருன். அகம் புறம் என்னும் இருவகை நிலைகளில் சீவர்களுடைய வாழ்வுகள் உருவாகி மிளிர்கின்றன. உள்ளே மனம்; வெளியே இனம். புனிதமான இனிய மனம் இருமையும் பெருமையா இன்பம் கருகிறது; அத்தகைய இனமும் அவ்வாறே புரிகிறது. இவை பிழையுடையன வாயின் அந்த மனித வாழ்வு எவ்வழியும் பழி துயரங்களேயாம். இயற்கை செயற்கைகளாய் அமைந்த மனமும் இனமும் நல்லனவாயின் அங்க மனிதன் நல்லவனப் உயர்ந்து நலம் பல காணுகிருன்; அல்லனவாயின் அவலமாய் இழித்து தா ழ்கின்ருன். மனத்தாலும் இனத்தாலும் ம | ங் த ர் உருவாகி வருவது ஒர்ந்து உணர்த்து கூர்ந்து தெளிய வுரியது. மனத்தானும் மாந்தர்க்கு உணர்ச்சி: இனத்தானும் இன்னன் எனப்படும் சொல். (குறள், 458,) மனம் இனம் என்னும் இருவகைக் கொடர்புகளையும் குறித்து உணர்த்தியுள்ள இதனைக் கூர்ந்து சிந்திக்க வேண்டும். க | ன் சேர்ந்த இனத்தின் படியே மனிதன் வெளியே கலை நீட்டி வரு கிருன். நல்லவன், தீயவன், பெரியவன், சிறியவன் என இன்ன வாறு உலகில் ஒருவன் உலாவி வருவது அவன் சேர்ந்த இனத் தின் தன்மைகளைப் பொறுக்கே யாண்டும் நிகழ்கின்றது. நீ நல்லவகுப் உ ய ர வேண்டுமானல் நல்ல இனத்தோடு சேர்ந்து பழகுக என மனித சமுதாயத்துக்குத் தேவர் இவ்வாறு புனித போதனையை அதி விருபமா இனிது செய்திருக்கிரு.ர். சார்ந்த சார்பின்படியே மனிதன் நேர்ந்து வருதலால் தான் சாரும் இனத்தின் சீர்மை நீர்மைகளைக் கூர்மையாக ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். செம்மையான இனத்தைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/215&oldid=1327605" இலிருந்து மீள்விக்கப்பட்டது