பக்கம்:தரும தீபிகை 6.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77. அ றி வு - 丑945 ாது. தேசமக்கள் நல்வாழ்வே செங்கோலின் வாழ்வென்னும் வாசகத்தை நன்கு வகுத்துணர்ந்து-மாசு படியாமல் மன்னன் படிபுரங்து வந்தால் அடியாம் அனைத்தும் அவன். (கூ) இ-ள் அரசனுடைய செங்கோல் சிறந்து வாழ்வது தேச மக்க வருடைய நல்ல வாழ்வினலேயாம்; ஆகவே தன் ஆட்சியில் மாசு பாதும் படியாமல் மன்னன் நன்கு பாதுகாத்து வர வேண்டும்: அவ்வாறு வரின் அகிலவுலகமும் அவன் வசமாய் வரும் என்க. அரச வாழ்வும் குடிவாழ்வும் ஒருங்கே அறிய வங்கன. தனது தலைமையான நிலைமை பாதும் நிலை குலேயாமல் ான்றும் நிலைத்து வர வேண்டுமானல் குடி சனங்களுடைய லெமையைக் கூர்ந்து நோக்கி அரசன் யாண்டும் ஒர்ந்து பேணி வ வேண்டும். வேருக்கு நீர் வார்க்கால் மரத்தின் கிளைகள் Llv ழித்துக் கழைத்து வரும்; அதுபோல் ஊருக்கு உதவி புரிந்து உரிமையோடு பார்த்துவரின் அரசனது குடி பெருமை மிகப் பெற்று எவ்வழியும் செழுமையாய்ச் செவ்விய நிலையில் வளர்ந்து வளர்ந்து கேசு மிகுந்து வரும் என்க. மாக்கர் மனம் மகிழ்ந்து வரும் அளவு வேந்தர் இனம் யர்ந்து வருகிறது. தலைமைச் சிறப்பைத் தாங்கியுள்ளவன் டி .க நிலைமைப் பொறுப்பை உணர்ந்து நீர்மையோடு காட் ைப் பேணி வருவது சீர்மையான ஆட்சியாய்ச் சிறந்து வரு _, து. ஆளும் தகைமை அவனி வாழும் வகைமையில் வந்தது. நாடு மகிழ ஈலம் புரிந்து கலம் புசக்து வருபவன் சாடிய பொருள்களையெல்லாம் ஈன்கு எய்தி டிேய வாழ்வுடன் நிலவி வருகிருன். உரிய கடமையை ஒர்ந்து செய்வது அரிய கவம் ஆகிறது; ஆகவே அது பெரிய மகிமையை அருளிப் பேரின்பம் அருகிறது. நீதி முறையால் ஆதிபகவன் அருள் அமைகிறது. கோளும் ஐம்பொறி யும்குறை யப்பொருள் ாளும் கண்டு கடுவுறு கோன்மையின் ஆளும் அவ் அரசே அரசு; அன்னது வாளின் மேல் வரு மாதவம் மன்னனே. (இராமா, மந்தரை, 13) | £444

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/22&oldid=1327395" இலிருந்து மீள்விக்கப்பட்டது