பக்கம்:தரும தீபிகை 6.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2050 த ரும தீ பி ைக ஒதிய மூன்றினில் ஒன்று குன்றினும் போதிய அரசியல் புகழ்பெ ருதரோ. (1) விரமே பகைவரை அடக்கும்; மெய்க்கொடை வாரமே புகழினை வளர்க்கும்; நீதியின் சாரமே தரணியைத் தாங்கும்; இந்தமுச் சீரமை அரசனே தேவன் ஆவல்ை. (2) விரமில் வேந்தனும், விளேவில் பூமியும், ரேமில் குளமும் கல் கிறையில் பெண்மையும், தாரமில் வாழ்க்கையும், தகவில் நெஞ்சமும், நேரென லாயிழி நிலையில் ஆழுமே. (3) செயிருறு களேகளேச் செகுத்து நீக்கிகற் பயிர்களேக் காத்தல்போல் படுவெம் பாதக வயிரரைச் சுட்டற மடித்து மாண்பு அம் உயிர்களேக் காப்பதே உலகம் காப்பதே. (4) (வீரபாண்டியம்) இங்கப் பாசுரங்கள் இங்கே நன்கு சிந்திக்கத் தக்கன. அரசியல் அமைதிகளும் அரசுக்கு வி ம் உறவுரிமையா யுறுதி புரிந்துள்ள ககைமையும் உணர வந்தன. ஆண்மை உறுதி ஊக்கம் ரேம் கைரியம் சூரம் செளரியம் பராக்கிரமம் என்னும் மொழிகளில் வீர ஒளி வீசியுள்ளது. கலைமையான உ ய ர் வு எங்கே இருக்கிறதோ அங்கே விர ம் இயல்பா நிலவி மிளிர்கிறது. கல்வி ஞானம் தானம் தயை முதலிய நிலைகளில் சிறந்து நிற்பவரும் விரத்தை மருவியே உயர்ந்து ஒளி மிகுந்து வருகின் முர். கல்வி வீரன், ஞான வீரன், கான வீரன், தயா விரன் எனப் பு க ழ் பெற்று வந்துள்ளவர் வீரத்தின் வியனிலையை நயமா விளக்கி நிற்கின்ருர். வினையாண்மையில் ச த ர ன ப் உயர்ந்து வருபவனைக் கரும வீரன் என உலகம் உவந்து கூறுகி றது. தருமத்தை யாண்டும் உறுதியாக் கழுவி வருபவனைத் தரும வீரன் என்கின்ருர். சக்திய விரன் என அரிச்சந்திரன் உத்தமமான பேர் பெற்று உலக சோதியாய் ஒளி வீசி நிற்கின்ருன். குன நலங்களுள் விரம் எத்தகைய த? உயர் நிலையிலுள்ள அரசர்க்கு அது எவ்வாறு உ யி ர் கிலையாயுள்ளது? என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/227&oldid=1327617" இலிருந்து மீள்விக்கப்பட்டது