பக்கம்:தரும தீபிகை 6.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1946 த ரும தி பீ கை பொறி வெறியனுப்ப் போகங்களில் இழிந்து உழலாமல் சாளும் கருமங்களை நன்கு கவனித்துப் பொருளை ஈட்டிக் தொகுத்து வகுத்து அருளோடு யாவரையும் இதமாய்ப் பேணி வருபவனே அரசன் ஆவான்; அக்க அரசு கூரிய வாள் மேல் இருந்து செய்யும் சீரிய மாதவமாய்ச் சிறந்து விளங்கி யாண் டும் மகிமை சுரங்க வரும் என இது உணர்த்தியுள்ளது. தேசத்தை ஆளுவது எவ்வளவு அரிய செயல்! அதனை உரி மையாக உடையவன் எத்துணைப் பொறுப்போடு உத்தமனப் உயர்த்திருக்க வேண்டும் என்பது ஈண்டு உய்த்துணர வந்தது. மனித சமுதாயம் நெறிமுறை தழுவி இனிது வாழ்ந்து வர உரி மையோடு பாதுகாத்து வருவது அரிய பெரிய அரச தருமமாய் மருவி வருகிறது. அத்தகைய குலதருமத்தை ஈலமாகப் பேணி வருபவன் உத்தம அரசகுப் ஒளி மிகுந்து உயர்ந்து திகழ்கிருன். தன் கடமையைக் கருதிச் செய்கிறவன் அரிய தவத்தைச் செப்தவனப்ப் பெரிய மகிமைகளை அடைந்து கொள்கிருன். p_o 55 மாந்தர் உவந்துவர எந்த அரசு முறை புரிந்து வருகிறதோ அந்த அரசை அமரரும் புகழ்ந்து வருகின்றனர். அரிய தவத்தை யுடைய முனிவரும் பெரிய பதவியை அடைந்துள்ள அமரரும் உவந்து புகழ ஒருவன் அரசு புரிந்துவரின் அக்க ஆட்சி எத்தனை மாட்சியாப் உயர்ந்திருக்கும்! இராமன் மரபு போல் பரம்பரை யாகத் தரும நீதிகள் தழைத்து வந்த அரசரிடமே அத்தகைய உத்தம ஆட்சி காட்சியாய் வந்துள்ளது. சீவகோடிகள் இன் புடன் வாழ அன்புடன் அரசு புரிவது அரிய மாதவம் ஆகிறது. அருந்தவம் அரசபாரம் இரண்டுமே அரிய, தம்மை வருந்தியும் உயிரை ஒம்பி மனத்தினே வணக்கல் வேண்டும்; திருந்திய இரண்டும் தத்தம் செய்கையில் திரியுமாயின் பெருங் துயர் விளேக்கு மன்றே பிறங்குதார் கிறங்கொள் வேலோய்! அந்தரம் திரியும் செய்கை அமரர்தம் அரசு வேண்டி இந்திர வுலகம் காணும் நெறியவை யாவை? என்னின், மந்திரம் வழாத வாய்மை மாதவம் முயறல் அன்றேல் தங்திரம் தழுவிச் செங்கோல் தளர்விலன் தரித்தல் என்ருன். (குளாமணி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/23&oldid=1327396" இலிருந்து மீள்விக்கப்பட்டது