பக்கம்:தரும தீபிகை 6.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2053 ரேன் அருந்திறலாளன் என உலகம் உவந்து புகழ நேர்க்கவர் உயர்ந்த குல வீர ராய் ஒளி பெற்று நிற்கின்ருர். ஆண்டகை என இராமனைக் காவியப் புலவர்கள் யாவரும் ஆவலோடு கூ றி வருவது அவனது அருந்திறலாண்மைகளை வியந்து மகிழ்ந்தே பாம். அரிய கடல் கடந்து பெரிய போர் புரிந்து கொடிய கி ரு கர் குழுவை அடியோடு முடிய நூறியுள்ள அவ்விர னது ஊக்க மும் உறுதியும் உரையிடலரியன. வேந்துக்கு உரிய உயர் நீர்மை கள் யாவும் அவ்வேக்கலிடம் எவ்வழியும் திவ்விய துளிகள்ை விசி புள்ளன. அஞ்சாக ஆண்மை எஞ்சாக மேன்மையாப் நின்றது. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந் நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. (குறள், 583) மன்னனிடம் மன்னியிருக்க வுரிய குண நலங்களைக் கேவர் இன்னவாறு குறித்திருக்கிரு.ர். அஞ்சாமையைக் கலைமையாக முதலில் கி.முத்திய கால் அரசுக்குத் தனி உரிமையான அதன் நிலை மை கெரிய வங்கது. அஞ்சுகல் = மனம் கலங்குதல். கலங்கிய நீரில் உருவம் சரியாக் காண இயலாது; அதபோல் நிலைகுலைந்த நெஞ்சு எதையும் செய்ய இயலாது. மனத்திண்மையோடு மருவி புள்ளவனே வினைகளைத் திண்மையாச் செய்து வியன் பயன் காண்கிருன். மேன்மையாய் ஆளவுரிய அரசனிடம் அரிய பல பான்மைகள் மருவியிருந்த போதுதான் அங்க ஆட்சி சிறந்து விளங்கி வரும். உரிய நீர்மைகள் உயர் சீர்மைகளாகின்றன. அனுகீதை என்னும் அரிய ஆாலில் அரச நீர்மைகள் வரிசை பாக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை ேம ல் காட்டாரும் விரும்பி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கின்றனர். வேந்தின் இயல்புகள்விழைந்து கொள்ளவந்தன; சில அயலே வருகின்றன. “Nobility, enlightenment, courage, forgiveness, truth, equability, absence of fear, absence of stinginess, straightforovardness, purity, dexterity, valour.” (Anugita) 'பெருந்தன்மை, தெளிவு, கைரியம், சகிப்பு, சக்தியம், சமநோக்கு, அஞ்சாமை, உலோபம் இல்லாமை, நேர்மை, களப்மை, சாதுரிய சாகசம், விர ம்' என்னும் இவை நல்ல அரசுக்கு உரிய தன்மைகளாம். இவை இங்கே கருத வுரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/230&oldid=1327620" இலிருந்து மீள்விக்கப்பட்டது