பக்கம்:தரும தீபிகை 6.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2054 த ரு ம தீ பி ைக கனக்கு உரிமையான இனிய இயல்புகள் நன்கு அமைந்துள்ள அளவுதான் எந்த வேந்தனும் ஒளி பெற்று உயர்ந்து வருகிருன். உள்ளம் தளராத உறுதியும் கரும நீதியும் அரசியலுக்கு உயர் மகிமைகளை அருளுகின்றன. அந்நீர்மைகள் கோப்ந்த அரசனை உலகம் உவந்து போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகின்றது. 'அரசியல் பிழையாது அறநெறி காட்டிப் பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது குடமுத்ல் தோன்றிய தொன்றுதொழு பிறையின் வழிவழிச் சிறக்ககின் வலம்படு கொற்றம்; உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் பொய்சேண் நீங்கிய வாய்கட் பினேயே! முழங்குகடல் ஏணி மலர்தலை உலகமொடு உயர்ந்த தேளத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே! கெடாது கிலேஇயர்கின் சேண் விளங்கு நல்லிசை. (மதுரைக் காஞ்சி) நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனுடைய நிலைமை நீர்மைகளை இது குறித்துள்ளது. மாங்குடி மருதனுர் என்னும் சங்கப் புலவர் இக்கோமகனுடைய குண நலங்களையும் அரசியல்முறைகளையும்நெறிகளையும்சுவையாகப்பாடியிருக்கிரு.ர். இனிய அமிர்தத்தோடு உயர்ந்த பொன்னுலக வ | ழ் வு கிடைப்பது ஆயினும் பொய் பேச மாட்டான்; இவ்வுலகக்கோடு சிறந்த தேவர்கள் திரண்டு வந்தாலும் பகைவர்க்கு அஞ்சிப் பணிய மாட்டான் என்ற கல்ை இவனது சத்திய நிலையையும் சித்தத்தின் திடக்கையும் உத்தம வீரத்தையும் ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். நீதிமன்னர் கித்தியசோதிகளாய் நிலவுகின்றனர். இத்தகைய மேலான அரசரை இந்நாடு முன்னம் பெற்றி ருந்துள்ளதை நினைத்து வியந்து நெஞ்சம் களிக்கின்ருேம். பொப் நீசம் என நீங்கி யாண்டும் எவ்வழியும் மெய்யே பேசி மேன் மை நீண்ட அக்கப் பாண்டியன் ஆண்டு வந்த நாட்டிலே இன்று பொப் பரவியிருக்கும் புலை நிலை குலை நடுங்கச் செய்கின்றது. காணுமல் பொய்பேசி நாசமாய்ப் போகின்ற நாட்டார் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/231&oldid=1327621" இலிருந்து மீள்விக்கப்பட்டது