பக்கம்:தரும தீபிகை 6.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2065 மேனுள் உற்ற செருவிற்கு இவள்தன்னே யானே எறிந்து களத்து ஒழிந்தனனே; கெருகல் உற்ற செருவிற்கு இவள் கொழுகன் பெருகிரை விலங்கி யாண்டுப்பட் டனனே இன்றும், செருப்பறைகேட்டு விருப்புற்றுமயங்கி வேல் கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் விே ஒருமகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே. (புறம், 279] இந்த வீரத்தாயின் மன நிலையை உணர்ந்து நாம் வியந்து கிற்கின் ருேம். இனிய பெண்மையிடம் அரிய திண்மைகள் உள்ளன. இத்தகைய உத்தமத் காப்கள் உதித்திருந்தமையால் காட் டில் சுத்த விரர்கள் யாண்டும் தோன்றி நின்றனர். கிலத்தின் கிலையை விளைவு காட்டுதல் போல் குலத்தின் நிலையைக் கு டி ப் பிறக்காரது குணமும் செயலும் மனமாக் காட்டுகின்றன. சிறந்த வீரக் குடியில் பிறந்த ஒரு கிழவி யிருந்தாள். யாரிட மும் வீர வாழ்க்கையைக் குறித்து அவள் விரும்பிப் பேசுவது வழக்கம். ஒரு ஆடவன் பிறப்பு சிறப்பு அடைய வேண்டுமானல் கன் காட்டின் நன்மைக்காக அவன் இறப்படைய வேண்டும் பன இன்னவாறு கூறி வருவாள். அவளுக்கு ஒரு மகன் இருக் கான்; அரசனுக்கு உதவியாகப் போருக்குப் போனன். வி ர பராக்கிரமத்கோடு போராடினன்; பாம்ருர்படை ஏற்றம் உம்றி ருங்கமையால் ஆற்றல் புரிந்தும் ஈற்றில் இறந்து போனன். மகன் இறந்த செய்தியைச் சரியாகத் தெரியாமல் சிலர் மாறு பாடாக வந்து அத்தாயிடம் சொன்னர்: 'அம்மா! உன் மகன் போராட முடியாமல் புறங்காட்டி ஒடி உயிர் தப்பிப் பிழைத் கான்’ என்று உரைத்தார். அந்தச் சொல்லைக் கேட்டதும் அவள் உள்ளம் கொதித்தாள். என் மகன் பேடி போல் ஒடி யிருக்க மாட்டான்; நீங்கள் சொல்லுகிறபடி அவன் செய்தி ருக்கான் ஆனல் 'அவன் பால் உண்டு வளர்தற்கு ஏதுவாயிருந்த ைன் முலைகளை அறுத்து எறிவேன்' என்று கூரிய ஒரு வாளைக் கையில் எடுத்துக் கொண்டு போர்க்களத்துக்கு ஒடிஞள்: ாடிக் கேடினள்; பினங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். 'மணிபட்டுக் கிடங்த தனது அருமை மகனது உடலைக் கண் 259

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/242&oldid=1327634" இலிருந்து மீள்விக்கப்பட்டது