பக்கம்:தரும தீபிகை 6.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1948 த ரும தீ பி ைக புகழும் இன்பமும் வளமாய் உளவாம்; குற்றம் குறைகள் சேராமல் மனிதரைப் பேணிவரின் அந்த மன்னன் பின்பு தேவ ரைப் பேனும் திவ்விய நிலைமையை நேரே எய்துவான் என்க. காசினி= பூமி. கேசு = கீர்த்தி. ஒளி மிகுந்த புகழ் தேசு என வந்தது. தேசம் பெற்றவன் தேசு பெற வேண்டும். பிறக்க மனிதன் எவனும் கனக்கு உரிய கடமையைக் கருதிச் செய்யவே உரிமையாய் மருவியிருக்கிருன். தன் கருமத் தைச் செய்யாமல் ஒருவன் காலத்தைக் கழித்துவரின் அவன் கடையனப் இழிந்து படுகிருன். காரியங்களைச் செப்து வரும் அளவே ருேம் சிறப்பும் எய்தி வருகின்ருன். மனித இனத்துள் தனி மகிமை அடைந்துள்ள அர சன் தனது நிலைமையை உணர் ந்து கிலம் புரந்துவரின் அக்கக் கலைமை என்றும் குன்ருமல் வென்றி விருேடு விளங்கி யாண்டும் மாண்பு சுரக் து வரும். நரபதி, மகிபதி, தராபதி என அரசனுக்கு அமைந்திருக்கும் பெயர்கள் அவனுடைய கிலேமைகளைத் துலக்கி நிற்கின்றன. மனித சமுதாயம் அமைதியாய் வாழ உலகத்தை இனிது பாது காத்து வருபவனே மன்னன் oT ன்னும் பேர்க்கு உண்மையான உரிமையாளன்ஆகிருன். சிறந்த புண்ணியத்தினலேயே ஒருவன் தேசாதிபதியாப்ப் பிறந்து வருகிருன். 'அறம்புரிந்து அம்ம அரசிற் பிறத்தல் துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் பாடு செயலியார் தத்தம் பிறந்தவேல் வென்றிப் பொருட்டு,' " (தகடு ர்) புரிந்த அறத்தின் பயனல் ஒருவன் அரசன் ஆகின்ருன்; அங்கனம் சிறந்த நிலையில் பிறந்தவன் கரும விர னப் உயர்ந்து யாண்டும் வென்றியோடு விளங்க வேண்டும் என இது விளக்கி யுள்ளது. ஆளும் தலைமை அதிசய ஆண்மையாம். அரிய நிலையில் வந்துள்ள சரியான ஒரு கலைவனுல் உலகம் நெறியே நடந்து வருகிறது; அவனுடைய ஆணை வழியே யாவரும் ஒழுகி விழுமிய நிலையில் விளங்கி வருகின்றனர். “ All cannot be rulers, and men are generally best governed by a few. Some born to govern, and others to obey. --- (Goldsmith)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/25&oldid=1327400" இலிருந்து மீள்விக்கப்பட்டது