பக்கம்:தரும தீபிகை 6.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 2078 803. ஊனழிய நேர்ந்தாலும் உள்ளழியார் எவ்வழியும் கோனலமே காடிக் குறிக்கொள்வார்-மானாலம் குன்ற வருவ குறியார் குலவிரர் - வென்றி விழைவார் வினை. )سه( சிறந்த குல வீரர் உடல் அழிய நேர்ந்தாலும் உள்ளம் கலங்கார்; எவ்வழியும் தம் அர சனுக்கு நன்மைகளிையே நாடி கிற்பர்; மான கலங்களை மகிமையோடு பேணி வருவர்; ஈனங் களே எண்ணுர்; என்றும் வெற்றியே விழைந்து விளங்குவர் என்க. புனித நிலைகள் கனி விரங்கள் ஆகின்றன. உண்மையான விரக் குடியில் பிறந்தவர் எவ்வழியும் திண் மையாளராய்ச் சிறந்து திகழ்கின்ருர். நேர்மையும் மானமும் அவரிடம் சீர்மையாய் நிலைத்திருத்தலால் கீழ்மை யாதும் நேரா மல் பாண்டும் மேன்மையாகவே விளங்கி கிற்கின்ருர். உயர்நிலை கள் யாவும் உயர்ந்த நீர்மைகளால் அமைந்து வருகின்றன. நல்ல பண்புகளால் உள்ளம் உயர்க்க போது அந்த மனிதனை எல்லாரும் உவந்து போற்றுகின்ருர். அவனுடைய பெயரும் புகழும் உலகத்தில் ஒங்கி எ ங்கும் ஒளி விசி உலாவுகின்றன. ஈன்ற காய் கங்தையர் கனக்கு உரிமையா இட்ட பெயரை உலகம் உவந்து பேசும்படி எந்த மகன் செய்து வருகிருனே அந்த மகனே மகான் ஆகின்ருன்; அவன் தோற்றமே ஏற்றம் பெறுகின்றது; அவனே தோன்றல் என்னும் ஆன்ற மேன்மை, யை அடைந்து நிற்கின்ருன். அங்கனம் அடையாகவன் தோற்றம் கடையாகின்றது. கோன்றலாய்க் கோன்ருதவன் கோன்ருமல் கொலைவதே நல்லது என்று தேவர் உள்ளம் வருந்தி உரைத்தி ருத்தலால் பிறந்த மனிதன் பெரிய மகிமையோ டு பெருகி வர வேண்டும் என அவர் உருகி விழைந்துள்ளமை கெரிய வந்தது. வீரம் கொடை ஞானங்களைக் கழுவி கின்றவரே விழுமிய மேலோராய் விளங்கி யுள்ளனர். அவருடைய உருவங்கள் மறைந்து போனலும் பெயர்களை விழைந்து கூறி மாந்தர் மகிழ்ந்து வருகின்றனர். வழி முறையே வழங்கி வருதலால் ·೨| ಹರ ೩ யாகம் அழியாமல் ஒளிவிசி என்றும்விளங்கி நிற்கின்றன. கோன்றிய யாவும் நிலையின்றி அழிகின்ற உலகிலே ஆன்றமே 260

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/250&oldid=1327643" இலிருந்து மீள்விக்கப்பட்டது