பக்கம்:தரும தீபிகை 6.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81. வீ ர ம் 207 7 கண்டா யுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னே த் திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத் தொண்டா கிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாயடா அந்தகா! வந்துபார் சற்றென் கைக்கு எட்டவே. பட்டிக் கடாவில் வரும் அந்தகா! உனேப் பார் அறிய வெட்டிப் புறங்கண்டலாது விடேன் வெய்ய குரனே ப்போய் முட்டிப் பொருத செவ்வேல் பெருமாள் திரு முன்புகின்றேன் கட்டிப் புறப்படடா சத்திவாள் என்றன் கையதுவுே. (கந்தர் அலங்காரம், 25, 64) விர மூர்த்தியான முருகக் கடவுளை உபாசித்து வந்துள்ள மையால் அருணகிரியார் நேரே கூற்றுவனையும் போருக்கு அறை கூவி இவ்வாறு வீராவேசமாய் விருது கூறி வி.முடன் நின்ருர். விரவேல் தாரைவேல் விண்னேர் சிறைமீட்ட திரவேல் செவ்வேள் திருக்கைவேல்---வாரி குளித்தவேல் கொற்றவேல் குர்மார்பும் குன்அறும் துளேத்தவேல் உண்டே அனே. (நக்கீரர்) செருவில் ஒருவ! பொருவிறல் மள்ள! குன் ருக் கொற்றத்துக் குறிஞ்சிக் கிழவ! போர் மிகு பொருங்! (திருமுருகாற்றுப்படை) முருககாகனே நக்கீரர் இவ்வாறு வீரப் பேரால் துதித்திருக் கிரு.ர். விரம் எவ்வளவு மகிமையுடையது என்பதை இவற்ருல் நன்கு உணர்ந்து கொள்ளுகிருேம். தெய்வ பத்தியும் சித்த சுத்தி யும் அற்புத சக்திகளை அருளுகின்றன; அருளவே அவர் யாருக் கும் அஞ்சாமல் ஆண்டவன் போலவே நீண்ட மேன்மையில் நிலவி நிற்கின்ருர். "நாமார்க்கும குடிஅல்லோம்; கமனே அஞ்சோம்; அஞ்சுவதும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை." திருநாவுக்கரசர் இவ்வாறு உரைத்துள்ளார். பரமவிரனை இறை வனைப் பரவியுள்ளமையால் இவ்வளவு தீரமாப் விர வசனங்களை அவர் பேச நேர்ந்தார். ஞான சீலமும் தரும நீர்மையும் மருவிய போது அங்கே அதிசயமான விர ஒளி நேரேவிசி எழுகின்றது. போசன் என்பவன் மாளவ தேசத்து மன்னன் மகன். மதிநலமுடையவன்; இளமையிலேயே தங்தை இறந்து போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/254&oldid=1327648" இலிருந்து மீள்விக்கப்பட்டது