பக்கம்:தரும தீபிகை 6.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்பத்திரண்டாம் அதிகாரம். 'ெக ைட அஃதாவது தனக்கு உரிய பொருள்களைப் பிறர்க்கு உவந்து கொடுக்கும் உபகார நீர்மை. உள்ளத் திண்மைபோல் வண்மையும் அரசனுக்கு இயல்பான உயர்ந்த கன்மை ஆதலால் அந்த உண்மை தெரிய விரத்தின் பின் இது வைக்கப்பூட்டது. 811. ஈகை இயல்பே இருமையும் இன்பமாய் வாகை புரிந்து வருதலால்-ஈகையான் எவ்வழியும் மேன்மையே எய்தி மகிழ்கின்ருன் செவ்வழிகேர் கண்டு தெளிந்து. (க) இ-ள் ஈகைக் குணம் இம்மையும் மறுமையும் இன்பமாய் நன்மை புரிந்து வருகிறது; ஆகவே ஈகையாளன் எவ்வழியும் செவ்விய மேன்மைகளை அடைந்து சிறந்து மகிழ்ந்து உயர்ந்து திகழ்கின் முன்; இந்த உண்மையை உணர்ந்து உவந்து கொடுத்து உயர்க. இனிய இயல்புகள் இனிது அமைந்தபோதுதான் மனிதன் தனி மகிமையாய் உயர்ந்து வருகிருன். குன நீர்மைகளுள் ஈகை உயர்தரமுடையது. ஈதல், கருகல், கொடுத்தல் என்னும் தொழில் அடிகள் உபகாரநிலைகளை உரிமையா உணர்த்தியுள்ளன. பிறவுயிர்கள் இன்புற உதவி புரிகிறவன் தன் உயிர்க்குப் பெரிய இன்பங்களை ஆக்கிக் கொள் கிருன். அந்த அதிசய ஆக் கத்தை ஈகை இனிது விளைக் து வருகிறது; வரவே அது ஆன்ம அமுதமாய், அரிய மகிமையாப், யாண்டும் பெரிய மேன்மை பாப் மருவி நின்று பேரின்ப நிலைகளை நேரே அருளுகின்றது. தலைமையான அரசனுக்கு அந் நிலைமையை நன்கு கிலே பெறச் செய்வது ஈகை ஆகலால் அது அரசுக்கு இனிய கடமை யாப் இயல் உரிமையாப் இசைந்து கின்றது. விரமும் ஈகையும் வேந்தனுக்கு வாகையும் ஒகையும் வழங்கி வருகின்றன. அரசுக்கு உரிய குண நலங்களைக் கூறி வரும்பொழுது அஞ்சா மை, ஈகை என விரத்தையும் கொடையையும் தேவர் சோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/262&oldid=1327656" இலிருந்து மீள்விக்கப்பட்டது