பக்கம்:தரும தீபிகை 6.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2086 த ரும தீ பி. கை வைத்திருப்பது சிந்திக்கத்தக்கது. இராசகம் பீரமான நீர்மைகள் யாண்டும் உயர்ந்த சீர்மைகளாய்ச் சிறந்து திகழ்கின்றன. உள்ளத்திண்மை ஒருவனே வீரன் என உயர்த்துகிறது. உதவியான கொடை வள்ளல் என விளக்குகிறது. விரன், வள்ளல் என வியன் பெயர் பெற்றவன் மனித சமுதாயத்துள் தனி நிலையில் உயர்ந்து என்றும் இனியனப் விளங்குகிருன். பேடி, உலோபி எனப் பிழைபடின் அவன் இழி வாய்க் கழிந்து ஒழிகிருன். இயல்பு குன்ற உயர்வு பொன்றும். வள்ளல் என்னும் பெயரைக் கேட்டால் எல்லாரும் உள் ளம் உவந்து கொள்ளுகின்ருர், அகற்கு மாருக உலோபி என்று கூறினல் எவரும் அருவருத்த வெறுத்து இகழ்கின் ருர். கொடைக்குனம் மனிதனே க் கெட் வம் ஆக்குகிறது. இக் நீர்மை இல்லாதவன் சீர்மையிழந்து சிறுமையாய் இழிகிருன். நல்ல கன்மை ஒருவிய அளவு பொல்லாக புன்மை மருவிப் புலைப் படுத்துகிறது. இழி புலைகள் நீங்கி ஒளிபெற வேண்டுமானல் உபகார நீர்மை ஓங்கி வர வேண்டும் அதுவரின் அதிசய மேன் மைகள் வருகின்றன. ஈகை இருமையும் பெருமை கருகின்றது.

ஈவானே தெய்வம்' * (ஒளவையார்)

என்ற கல்ை ஈகையின் மகிமையை இனிது தெளிந்து கொள்ளலாம். கொடுப்பது கருமமாய் உயிரை உயர்த்துகிறது. உருவத்தில் மனிதன் ஆயினும் கொடையாளி உயர்வான தெய்வத்தின் நிலைமையை அடைந்த நிற்கிருன்; பொன்னும் பொருளும் உதவி மன்னுயிரைப் பேணி வருபவன் பொன்னுயி ராப்ப் பொலிக் த இன்னுயிர் முதல்வனப் இனிதுதிகழ்கின்ருன். மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓர் இனமாப் பொன்னின் பெயர்படைத்தால் போலாதே-கொன்னே ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவது ஆங்கே அளிப்பாரும் மக்களா மாறு. (பெரும்பொருள்) கொடுப்பவன் தங்கம்; கொடாதவன் இரும்பு என இது குறித்திருக்கிறது. குறிப்பு கூர்க் துனா வந்தது தமனியம் = பொன். இரும்புக்குக் கரும்பொன் என்.று ஒரு பெயர் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/263&oldid=1327657" இலிருந்து மீள்விக்கப்பட்டது