பக்கம்:தரும தீபிகை 6.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2088 த ரு ம தீ பி. கை அவர் சிறந்து விளங்குவர் என இது உணர்த்தியுள்ளது. தன் னைத் கழுவி நின்றவனைக் கொடை எழுமையும் இன் புறச் செய் கிறது. கொடுப்பவனுக்கே கடவுள் எல்லாம் கொடுக்கின்ருர். கொடையே எவர்க்கும் எப்பேறும் கொடுக்கும்; நெறியிற் பிறழாத கொடையே யாரும் தன்வழியின் ஒழுகச் செய்யும்; குறைதீர்ந்த கொடையே பகையை உறவாக்கும்; குலவும் பூதம் அனேத்தினேயும் கொடையே புரக்கும் என்றுள்ளம் கொள்ளப் புகன் ருன் கவுதமனே. (காஞ்சிப்புராணம்) எல்லா இன்ப நலங்களும் கொடையால் உளவாம் என இது குறித்துள க. கரும விளைவுகளை உடையது ஆகலால் கொடை அரிய பல பகிமைகளை அருளுகின்றது. எ ண்ணரிய மேன்மைகள் புண்ணியத்தால் விளேகின்றன. அந்தப் புண்ணி யம் கொடையால் கண்ணியமாய் விளைந்து வருகின்றது. Generosity is a virtue of a very different complexion. [Goldsmith]

தயாளமான கொடை பல சீர்கள் மருவிய கருமமா யுளது.” என்னும் இது இங்கே அறிய வுரியது. கருபவன் கரும வானுய இருமையும் பெருமை பெறுகிருன். கொடையால் புகழ் ஒளி பரவுகிறது; புண் ணியம் பெருகுகிறது, எண்ணிய இன்ப நலங்கள் எவ்வழியும் வருகின்றன. ஈக்து பழகி இனித வாழுக.

812 நீரலைபோல் தோன்றி நிலையாத இவ்வுலகில் ஓரிரண் டொண்குணமே ஓங்கிகிற்கும்-தேரிலவை வீரம் கொடையாம்; விழைந்திவற்றை மேவாதார் பேரிழந்தார் ஆவர் பிறழ்ந்து. )ربع( இ-ள் கடலில் எழுகின்ற அலைகள் போல் உடல்கள் தோன்றி பாவும் விரைந்து மறைந்த போ கிற இந்த உலகத்தில் விரம், கொடை என்னும் இரண்டு நீர்மைகள் கான் நிலைத்து நிற்கின் றன; இவற்றைத் தழுவி நின் ருர் விழுமிய புகழோடு விளங்கி நிற்கின்ருர்; கழுவாதவர் வழுவாய் ஒழிந்து போகின்ருர் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/265&oldid=1327659" இலிருந்து மீள்விக்கப்பட்டது