பக்கம்:தரும தீபிகை 6.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1950 த ரும பிே ைக இலங்குர்ேப் பரப்பின் வ&ளமீக் கூறும் வலம்புரி அன்ன வசைநீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின் கேள் அவன் கிலேயே கெடுககின் அவலம் அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவும் கள வேர் வாழ்க்கைக் கொடியோர் இனறவன் கடியுடை வியன் புலம் உருமும் உாருஅ அரவும் தப்பா: காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு அசைவுழி அசைஇ கசைவுழித் தங்கிச் செல்மோ இரவல! சிறக்ககின் உள்ளம். (பெரும்பாண்) திரையனது ஆட்சியின் மாட்சியை இது காட்சிப் படுத்தி யுள்ளது. களவு முதலிய இழி தொழில்கள் அவன் நாட்டில் கிடையா; காட்டுமிருகங்களும் யாருக்கும் இடையூறு செய்யா; எங்க நேரமும் யாதொரு பயமுமின்றி யாரும் எவ்வழியிலும் எதையும் கொண்டு செல்லலாம்; அல்லல் என்பது யாண்டும் இல்லாதபடி அவன் ஆண்டு நீண்ட புகழோடு நிலவி வந்துள் ளான் என்பதை ஈண்டு இகளுல் நன்கு அறிந்து கொள்கிருேம்,

சீவர்கள் இனிது வாழக் கனி யுரிமையோடு அரசன் பாது காவல் செப்து வரின் அங்கே கரும தேவதை நனி மகிழ்ந்து வாழும். மழை வளம் சுரக்த நிலம்வளம் நிறைந்து பல வளங் களும் அக்காட்டில் மிக விளைந்து மேன்மை மிகுந்து திகழும். " திே மன்னர் நெறிமுறை செய்யினே மாதம் மும்முறை வானம் வழங்குமே. † : என்ற கல்ை அரசன் நெறியோடு ஆண்டு வந்தால் அந்நாடு வளமாப் நீண்டு வரும் என்பது தெரிய வந்தது. பகை, பசி, பிணி, துயர் யாதும் இன்றி யாவரும் உவகையாப் வாழ்ந்து வர வேக்கன் வகை புரிந்துவரின் அது வானக வாழ்வாய் ஒளி புரிந்து தெளிவடைந்து விழுமிய நிலையில் விளங்கி வரும். மாந்தாதா என்னும் வேந்தன் அரசு புரிந்த காலக்தில் புலி யும் புல்வாயும் ஒரு துறையில் நேரே நீர் அருந்தி வந்தன; அந்த ஆட்சி சீர் அமைந்து திவ்விய நிலையில் உயர்ந்து வந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/27&oldid=1327402" இலிருந்து மீள்விக்கப்பட்டது