பக்கம்:தரும தீபிகை 6.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2098 த ரு ம தி பி ைக யே நீல மணிகளால் செய்திருக்க செய்குன்றுகளைப் பார்த்தான். நெடுமையாய் நிமிர்ந்து கின்ற அவற்றின் நிலைகளை நோக்கிய இராமன் இலக்குவனுக்கு இலக்கோடு சுட்டிக் காட்டினன். காவலன் பயந்த விரக் கார்முகக் களிறே! கற்ற தேவர்தம் தச்சன் லேக் காசினல் திருந்தச் செய்த ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டி வைத்த பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும் பாராய்! (இராமா, இலங்கை காண், 45) தன் அருமைத் தம்பியிடம் இராமன் உரிமையுடன் உரை யாடி யிருக்கும் அழகை ஊன்றி நோக்கி உவத்து நிற்கிருேம். அழகிய நீல இரத்தினங்களால் எழிலாகச் செய்து வைத்துள்ள குன்றுகள் ஒளி விசி நின்ருலும் அவை பாவம் படிக் கன ஆக லால் விரைந்து அழிந்து படும் என மருமமா விளக்கியருளினன். ஈவது தெரியா வுள்ளத்து இராக்கதர் என்றது அரக்காது இரக்க மின்மையையும் கொடுமையையும் கூர்ந்த னா வந்தது. ஈவு இரக்கமில்லாதவர் என இழி தீமைகளை விழிகெரிய விரித்தான். ஈகையை இழந்தபோது மனிதன் என்வளவு இழிந்து படுகிருன் என்பது இங்கே செவ்வையாப் க் தெளிந்து கொள்ள சேர்ந்தது. _ 815. ஈதலுறு கையே இறைகோல் இனிதேந்தி ஒதர்ே குழுலகை ஒம்புமால்-ஈதலிலா வன்கை மிடிவாய் மடிந்து தொழுதேற்றுப் புன்கையாய்த் தேய்ந்திழிந்து போம். (டு) இ-ள் ஈகை புரிந்து வந்த கை செங்கோலை ஏக்தித் தலைமையாய் கின்று அலைசூழ் உலகை நலமாக் காத்து வரும், ஈயாக வன்கை இழிந்த வறுமையில் அழுத்தி ன வரையும் தொழுது இர ங் து எவ்வழியும் தாழ்வாய்க் கழித்து ஒழிந்து போம் என்க. உயர்ந்த இன்ப நிலையும், இழிந்த துன்ப வகையும் மன்ப கையை மருவி வருகின்றன; அவ் வரவுக்கு உரிய உறவை இது உணர்த்தியுள்ளது. உயர்வு இழிவுகள் அவரவர் வினைகளின் வழி யே விளைந்து பாண்டும் கவருமல் தொடர்ந்து வருகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/275&oldid=1327671" இலிருந்து மீள்விக்கப்பட்டது