பக்கம்:தரும தீபிகை 6.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1952 த ரும தீ பிகை விளைகின்றன; அந்தப் புண்ணிய விளைவுகள் எண்ணரிய மேன் மைகளையும் இன்ப கலங்களையும் விளேக்கருளுகின்றன. தருமகுணங்கள் அமைந்த இத்தகைய உத்தமர்களை எந்த நாடு உரிமையாப் பெற்றிருக்கிறதோ அந்த நாடு பெருமைகள் யாவும் கிறைந்து புத்தேள் உலகம் போல் பொலிந்து விளங்கும். புனிதமான அந்த மனிதசமுதாயத்தை ஆளநேர்ந்தவன் அதிசய மகிமைகள் கோப்ந்து உலகம் த தி செய்ய வருகின்ருன். எல்லா உயிர்களையும் இனிது பேணுவதே நல்ல அரசின் நீர்மையாம். அக் கீர்மையாளன் பாண்டும் சீர்மையாளஞய்ச் சிறந்து திகழ்கிருன் இராமன் அரசு முடி சூட நேர்ந்த போது வையமும் வானமும் ஒருங்கே வாழ்த்தி கின்றன. அப்பொழுது அவனைக் குறித்து வசிட்ட முனிவர் உவந்து புகழ்ந்தார். அறிவு கலம் கனிக்கஅவருடைய உரைகளில் சில அயலே வருகின்றன. பொன்னுயிர்த்த பூ மடங்தையும் புவி எனும் திருவும் இன்னுயிர்த்துணை இவன் என கினேக்கின்ற இராமன் தன்னுயிர்க்கு என் கை புல்லிது தற்பயந்து எடுத்த உன்னுயிர்க்கு என கல்லன் மன்னுயிர்க்கெலாம் உரவோய்! மண்ணினும் கல்லள் மலர் மகள் கலைமகள் கலையூர் பெண்ணினும் கல்லள் பெரும்புகழ்ச் சன கியோ கல்லள் கண்ணினும் கல்லன் கற்றவர் கற்றிலா தவரும் --- உண்ணு நீரினும் உயிரினும் அவனேயே உவப்பார். [2] மனிதர் வானவர் மற்றுளார் அறங்கள் காத்து அளிப்பார் இனி இம் மன்னுயிர்க்கு இராமனின சிறந்தவர் இல்லை; அனேயன் ஆதலின அரச கிற்குறு பொருள் அறியின் புனித மாதவம் அல்லது ஒன்ற் இல்லெனப் புகன்ருன்..(3) (இராமாயணம்) இந்தக் கவிகளைக் கருத்து ஊன்றி நோக்கிப் பொருள்களை யும் சுவைகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். பூமி தேவியும், இராசலட்சுமியும் இராமனைத் தம் இன்னுயிர்த்துணை னன எண்ணி மகிழ்ந்துள்ளனர். அந்த மகிழ்ச்சி நிலை அவனது மகிமையைத் துலக்கியுள்ளது. சிவகோடிகள் யாவும் சிங்தை களித்துள்ளமையால் அரசாப் வந்த அவன் எந்த நிலையினன் என்பதை எளிது கெளிந்து கொள்ளலாம். இனி இம் மன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/29&oldid=1327405" இலிருந்து மீள்விக்கப்பட்டது