பக்கம்:தரும தீபிகை 6.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82. கொடை 2121 Β Ε மண்ணுல் சட்டி காத்து ஏக்தி மறநாய் கவ்வும் காலினாாய் அண்ணுங்து ஏங்கி இருப்பாயை அறிந்தோம் அறிந்தோம் அம் மம்மா பண்ணுர் மொழியார் பாலடிசில் பைம் பொற் கலத்தில் பரிந்துாட்ட உண்ணு கின்ற போகார்க்கும் உதவா மாந்தர் இவர் தாமே." (விவேக சிங்தாமணி) மண்சட்டியைக் கையில் ஏந்திக் கஞ்சிக்கு ஏங்கித் தெரு வில் கூவித்திரிவார் யார் தெரியுமா? சுவையான பாலமுதைத் தங்கக் கிண்ணத்தில் வைத்து மங்கையர் கொஞ்சி ஊட்ட உண்டு வந்தவரே; அவ்வாறு உண்னும் போது ஏழைகளுக்கு இரங்கி உதவாத பாவத்தால் இவ்வாறு இழிந்து பிச்சை எடுக்க நேர்ந்தார் என இது விளக்கியுள்ளது. ஈயாமையால் நேரும் இழி பிறவிகளையும் பழி துயரங்களையும் இவற்ருல் உணர்ந்து கொள்ளுகிருேம். தம் அரிய உயிர்க்கு உரிய ஊதியமான ஈதலை இழந்து மனிதர் பேதைகளாப் இழிந்து போவது பெரிய பரி காபமாகிறது. செய்த உபகாரமே சீவனைத் தெய்வமாக்குகிறது. அரசர் சிறந்த மேதைகள் ஆதலால் எவ்வழியும்கொடையை அவர் உவந்து பேணி வருகின்ருர், வீரம் போல் கொடையும் வேந்தரிடம் மேன்மையாய் விளங்கி மிகவும் உயர்ந்து கிற்கிறது. தன் காட்டில் ஏழைகள் யாரும் இல்லாமையால் கொடுத்து மகிழ முடியவில்லையே என்று மறுகி யிருந்த சேரமன்னன் ge৫ত । நாள் தனது தேரை அனுப்பி அயலிடங்களிலிருந்து இரவலர் களைக் கொண்டு வந்து உயர்ந்த உண்டி முதலியன ஊட்டி மிகுந்த பொருளும் கொடுத்துத் தகுந்த உபசாரத்தோடு அனுப்பின்ை.

    • 52j srgr sr fr ஆயினும் இரவலர் வேண்டித்

தேரில் தந்து அவர்க்கு ஆர்பதன் கல்கும் நசைசால் வாய்மொழி இசைசால் தோன்றல். ' (பதிற்றுப்பத்து) கொடுப்பதில் இம்மன்னன்கொண்டுள்ள ஆவலை இதல்ை அறிந்து கொள்கிருேம். இரவலர் இலரேல் புரவலருக்கு மதிப்பு இல்லை. பொன்றும் பொருளைச் சிறிது வாங்கிக் கொண்டு என்.றும் பொன்ருத பெரும்புகழைக் கொடுத்தலால் இரப்போரே சிறப் பான கொடையாளிகளாப் பாண்டும் உயர்ந்துள்ளனர். 206

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/298&oldid=1327695" இலிருந்து மீள்விக்கப்பட்டது