பக்கம்:தரும தீபிகை 6.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2124 த ரு ம தி பி ைக 15. மதியார் செய்திடும் உதவியை உணர்த்தும் பன்மணி மாடப் பொன்மதிற் கமலேக் கடிநகர் வைப்பினில் கண்டேம் வடிவ மற்றி அ வாழிய பெரிதே. (திருவாரூர் நான்மணிமாலை 9) இங்கப் பாசுரத்தைக் கருதிக் கவனியுங்கள். உமாபதியின் சீர்மை நீர்மைகளை இது நேர்மையா உணர்த்தி யிருக்கிறது. அர்த்தாாரீசுரன் என அமைந்திருக்கும் அந்த ஒரே திருவுருவில் ஈதலும் இரத்தலும் இசைந்திருத்தலை அதிசய விசித்திரமாய் விளக்கியுள்ள இதில்அரியபலஉண்மைகள் விளங்கியிருக்கின்றன. இடப்புறம் அம்மை அறம் புரிகிருள்; வலப்புறம் ஐயன் இரத்தலைச் செய்கிருன். காப்போல் இரங்கித் கருமம் செய்யுங் கள்; இல்லையேல் என்போல் இறங்கிக் கருமம் செய்ய சேரும் என்று உயிரினங்களுக்கு இறைவன் காட்டுவது போல் அக் காட்சி மாட்சியடைந்துள்ளது. உண்மை உய்த்துணர வுற்றது. கொடியார் எத்துணைக் கொடுமை செய்யினும், இனிய மதி யார் எவ்வழியும் இதமே செய்வர் என உரைத்திருக்கும் நயம் ஊன்றி நோக்கி உபகார நிலைகளை ஒர்ந்து கொள்ள வந்தது. உதவி செய்பவர் உத்தமராய் உயர்ந்து வருகிரு.ர். கொடை இவ்வாறு மகிமை யுடையதாயிருந்தாலும் கொள் வது யாண்டும் இளிவேயாம். கொடுப்பது எவ்வளவு உயர்வோ அவ்வளவு தாழ்வு எடுப்பதில் உள்ளது. கொடுத்துப் பழக வேண்டும்; எடுத்தப் பழக லாகாது. ஈந்து இன்பம் உறுக. கல்லாஅ எனினும் கொளல் தீது; மேல் உலகம் இல்லெனினும் ஈதலே நன்று. (குறள், 222) கொள்வது நல்லது; அதனல் உனக்குப்பேரின்ப வீடு கிடைக் கும் என்று யாரேனும் சொன்னலும் நீ யாரிடமும் வாங்காதே; ஈதல் துே; அதனல் மேல் உலகம் கிடையாது; நரகம் கான் சேரு வாப் என்று கூறினலும் நீ அஞ்சாமல் யாருக்கும் துணிந்து கொடு என வள்ளுவப் பெருக்ககை இங்வனம்மொழிந்துள்ளார். இந்த உறுதி மொழியைக் கருதியுணர்ந்து எவ்வழியும் உதவி புரிந்து இனிது ஒழுகி வரின் வாழ்வு புனிதமாய்க் கெழுமி வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/301&oldid=1327698" இலிருந்து மீள்விக்கப்பட்டது