பக்கம்:தரும தீபிகை 6.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83. நீ தி 2127 பற்றி ஆங்கில ஆட்சியாளர் இவ்வாறு தாழ்ச்சியான குறிப்பு உன் கூற நேர்ந்தார். அதற்குச் சில காரணங்களும் இருந்தன. நீதி பரிபாலனமுறை அரசனுடையது; அதை அவன் சரி பாப்ச் செய்ய வில்லையானல் குடி சனங்கள் சுகமாய் வாழ முடியாது. திருடர் முரடர் கொடியர் முதலிய திய குழுக்கள் பாங்கும் ஓங்கி நின்று தீங்கு புரிவர். புரியவே மக்கள் வெருவி அலமருவர். பொல்லாகார் அல்லல் புரியாவகை . ஒல்லையில் அடக்கித் தொல்லையான துயரங்கள் தன் காட்டின் எல்லையிலும் இல்லாவகை எதிாறிந்து செய்வதே நல்ல நீதி முறையாம். பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. (குறள்-73) ஒரு நல்ல நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை இது காட்டியுள்ளது. கோளர் குறும்பர் கொடியர் முதலிய பொல் லாக் கூட்டங்கள் இல்லாமல் நீக்கி நாட்டை அரசன் நன்கு பாதகாத்த போதுதான் மாங்கர் அங்கு மன அமைதியுடன் மகிழ்க் த வாழ்க்க வருவர். கீது களைவதே நல்ல நீதி புரிவதாம். அரசன் நீதி செலுத்திவரும் அளவு நாடு செழித்து வரும். அது செழிப்பாய்த் தழைத்துவர யாவரும் யாண்டும் களித்து வாழுவர். நாட்டில் எவ்வளவுக்கு 猛T வ்வளவு மாங்கர் உவந்து வாழுகின்ருர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அங்கே வேந்தன் டயர்ந்து திகழ்கின்ருன், செல்வம் கீர்த்தி ஆற்றல் வீரம் முக விய யாவும் நீதியினலேயே ஏற்றமாய் நிலைத்து வருகின்றன. கொடை விரங்களின் அடைமொழிகளை விட நீதியின் ரிமையே அரசனுக்கு மிகவும் சிறந்த மேன்மையாம். ". ក៏ផ្តាំ மன்னன் என உலகம் ஒதி வரும்படி அரசன் ஒழுகி சின் அது அவனுக்கு அதிசயமான பெரிய மகிமையாய் வரும். மருக்கிளர் தாமரை வாச நாண்மலர் நெருக்கிடு தடம்என இருந்த நீதியான். - (இராமா, இலங்கை கேள்வி,15) பரிமளம் கமழுகின்ற செந்தாமரை மலர்கள் பல அலர்ந்த :சிய கடாகம் போல் இராமன் இருந்தான் என இது குறித் ள்ளது. கீதியான் என்றது. அவனது தரும நீர்மையும் கருமங் சின் சீர்மையும் இர ாசமுறைமையும் இனிது கெரிய வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/304&oldid=1327701" இலிருந்து மீள்விக்கப்பட்டது