பக்கம்:தரும தீபிகை 6.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2128 தரும தி பி கை 'ஆர் அருள் சுரக்கும் திே அறம் கிறம் கரிதோ?" (இராமா, விபீட 187) நீதியும் தருமமும் பசிய கோலத் திருமேனியாய் மருவியுள தோ? என இராமனை இவ்வாறு விபீடணன் கருதி உருகி யிருக் கிருன். நீதியின் உருவமாய் இராமன் நிலவியுள்ளான் என்பதை இதனுல் இங்கே நன்கு உணர்ந்து நயம் தெளிந்து கொள்கிருேம். திேயும் தருமமும் நிறுவ யிேது கோதறு குணத்திய்ை! மனத்துள் கோடியால். (இராமா, ஆறு 5) அரசு முறை புரியும்படி பாதனை நோக்கி முனிவர்கள் இவ் வாறு வேண்டியுள்ளனர். உரிய அரசன் இல்லாமையால் தேசம் தேசு இழந்து தியங்கியுள்ளது; மாந்தர் எங்கும் மறுகி மயங்கி நிற்கின்றனர்; ஆகலால் ஆட்சியை ஏற்றருள் என்று அந்த விரத சீலனை வேண்டி கின்றனர். ரீதியும் தருமமும் நிறுவ என்ற கனல் அரசு முறைமை அறிய வந்தது. மெலியரை வலியர் கலி யாமலும், பெரியரைச் சிறியர் இகழாமலும், உரிமைகளைப் பிறர் கவராமலும் யாவரும் மரியாதையாக வாழ வேண்டுமா ல்ை அங்கே அரசன் சரியாக ஆன வேண்டும் என்பது இங்கே தெரிய நேர்ந்தது. காப்பு நிலை காவலன் நீதிமுறையால் நிலைத்து வருகிறது. பாதுகாப்பின் திறம் நீதி ஆட்சியின் கிறமாயுள்ளது. கெறிகடந்து பரந்தன நீத்தமே; குறி அழிந்தன. குங்குமத் தோள்களே: சிறிய மங்கையர் தேயும் மருங்குலே; வெறியவும் அவர் மென்மலர்க் கூந்தலே. (இராமா, நாட்டு, 40) தசரதனது ஆட்சிக் காலத்தில் கோசலா தேசம் இருந்தநிலை யை இது நயமா வரைந்து காட்டியுளது. பொருள் சயங்களைக் கூர்ந்த ஒர்க்க கொள்ள வேண்டும். செறி கடவாமலும், குறி அழியாமலும், சிறுமை சேராமலும், வெறி நேராமலும் அங் காடு விழுமிய நிலையில் கெழுமி யிருந்தது; அந் நிலையைக் கலை யின் சுவைகனியக் கவிஇங்கனம் தெளிவாக விளக்கியிருக்கிரு.ர்.

  • நெறி= வரம்பு, சன்மார்க்கம். குறி= குறிப்பு, அடையாளம். வெறி= வாசனை, குடிமயக்கம். நீத்தம்=வெள்ளம். நதிகளில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/305&oldid=1327702" இலிருந்து மீள்விக்கப்பட்டது