பக்கம்:தரும தீபிகை 6.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21:32 த ரும தீ பி. கை மிகுந்த விளங்கும். அவரை ஆளுகின்ற வேந்தம்ை சிறந்த திே மானுய் உயர்ந்து நிறைந்த புகழோடு நிலைத்து விளங்குவான். பிசிராந்தையார் என்பவர் பெரிய புலவர்; அரிய பல குன நலங்கள் அமைந்தவர். பாண்டிய நாட்டிலே பிசிர் என்னும் ஊரில் இருந்தவர். மூவேந்தரும் இப் பாவேந்தம் பால் ஆர்வம் மீதுணர்ந்து வந்தனர். அவருள் சோழ மன்னன் இவர் பால் ஆழ மான அன்பு பூண்டு நின்ருன் "பிசிரோன் என் உயிரோன்” என அப் பேரரசன் யாரிடமும் கூறுவது வழக்கம். நேரில் காணுதி ருந்தும் நெஞ்சில் பேரன்பு பேணி யிருக்கான். முடிவில் ஒரு முறை அவனை இவர் கானச் சென்ருர். அப்பொழுது இவருக்கு வயது எண்பது. மிகவும் முதியவர் ஆகலால் கரைத்த கலையரா யிருப்பர் என்று பலரும் கருதி யிருந்தனர். யாதொரு கரையு மின்றி மூப்பு நிலையும் தெரியாமல் வாலிபப் பொலிவோடு இவர் விளங்கி யிருக்கதைக் கண்டதும் அரசன் முதல் யாவரும் வியக் தனர். கிழமை நீங்கியுள்ள வளமையைச் சிலர் கிழமை யோடு நேரே கேட்டனர். அதற்கு இவர் உடனே பதில் கூறினர். புல வர் ஆகலால் பாட்டாலேயே விடை பகர்ந்தனர். சுவையான அக் கவி அரிய பல பொருள்களே மருவியது அயலே வருகிறது. 'யாண்டு பல வாக கரையில வாகுதல் யாங்காகியர் என வினவுதிர் ஆயின் மாண்டஎன் மனைவியொடு மக்களும் கிரம்பினர்; யான் கண் டனேயர் என் இளேயரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன் தலே ஆன் ஆறு அவிந்து அடங்கிய கொள்கைச் சான்ருேர் பலர்யான் வாழும் ஊரே." (பிசிராங்தையார்) வயது அதிகம் ஆகியும் கரை யில்லாமைக்குக் காரணம் என்ன? என்று அவையோர் கேட்ட போது இவர் இவ்வாறு சுவையாகப் பதில் சொல்லி யிருக்கிரு.ர். எனது மனைவியும், மக்களும் நல்ல குணசாலிகள்; என் இளையரும் ஏவலரும் நான் கருதியபடியே காரியம் செய வார்; பாண்டும் யாதொரு தீதும் சேராமல் வேந்தன் இனிது பாதுகாக்கருளுவன்; உள்ளமே சான் ருய் ஒழுகி வருகிற விழுமிய சான்ருேர் பலர் சான் வாழும் ஊரில் உள்ளனர்; ஆதலால் இன்னவாறு கரை திரை மூப்பு இலனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/309&oldid=1327706" இலிருந்து மீள்விக்கப்பட்டது