பக்கம்:தரும தீபிகை 6.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுபத்தெட்டாவது அதிகாரம். ஆ ற் ற ல், அஃதாவது செய்யவுரிய கருமங்களைச் சீர்மையாச் செய்து வரும் நீர்மை. அர்சனுடைய அறிவு வினையாண்மைகளில் விரிய மாப் மேன்மை யடைந்து வர வேண்டும் என உணர்த்துகின்ற மையால் அறிவின் பின் இது உரிமையா வைக்கப்பட்டது. 77.1 சிறந்த திருவுடையன் ஏனும் அரசன் பிறந்த குடியின் பெருமை-கிறந்தெரியத் தன்னுடைய ஆற்றலேநேர் தான்காட்டி கில்லானேல் பின்னடையும் பீழை பெரிது. (*) இ-ள் சிறந்த செல்வ வளங்களை அடைந்திருக்காலும் கான் பிறந்த குடியின் பெருமையை உணர்ந்து அரிய வினையாண்மைகள் புரி க் து யாண்டும் புகழோடு அரசன் உயர்ந்து வரவேண்டும்; அவ் இாது வரவில்லையானுல் எவ்வழியும் அவனுக்கு இழிவே விளையும்; அது விளையாவண்ணம் விரைந்து வினை புரிக என்பதாம். ஊக்கி வினைசெய் என்று இது உணர்த்துகின்றது. - பிறந்த மனிதருள் ஒருவன் சிறந்தவனப் உயர்ந்த வருவது அவனுடைய செயல் இயல்களின் உ யர்வுகளாலேயாம். கூரிய அறிவு இருந்தாலும் சீரிய செயலோடு சேர்ந்து முயன்ற போது தான் அது சிறந்து திகழ்கிறது. காரியம் தோயாத அறிவு வீரியம் தோயாது என்னும் மு.து மொழியிால் கருமத்தின் உறுதி நலனே உணர்ந்து கொள்கிருேம். அரிய வினைகளைச் செய்பவரே பெரிய மனிதராய்ப் பெருகிப் பேர் பெற்று வருகின்றனர். உரிய தொழிலை ஒருவன் ஊக்கிச் செய்துவரின் அது பொ ருளையும் புகழையும் ஆக்கி அருளுகிறது. கருமம் செய்யாமல் தளர்த்து கின்ருல் பெருமைகள் யாவும் பிறழ்ந்து போம். வினை யாண்மையில் மூண்ட அளவு ஆன்ம சக்தி வெளியாய் நீண்டு வருகிறது. வே ஒளி செயலிலேதான் தெளிவாய் விளங்குகிறது. தொழில் புரிவது உயிர்; சோம்பி இருப்பது சாவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/31&oldid=1327407" இலிருந்து மீள்விக்கப்பட்டது