பக்கம்:தரும தீபிகை 6.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.36 த ரு ம தீ பி ைக மக்கள் யாவரும் இன்புற்றுவாழ அன்பு கூர்ந்து ஆட்சி புரிவகே அரசனது மாட்சியாம். அந்த வேந்தனுடைய நீதி முறைகளை ஒர்ந்து யாண்டும் நல்ல நீர்மைகள் கோய்ந்து சீர்மை யோடு மாந்தர் வாழ்ந்து வர வேண்டும். சுக வாழ்வே சுவர்க்க வாழ்வு என்பது முதுமொழி. இனிமையான அவ் வாழ்வு புனிதமான எண்ணங்களால் பொலிந்து போக கலங்கள் மலிந்து வருகிறது. 824. பெற்ற மகனே எனினும் பிழைபுரியின் குற்றமறத் தண்டித்துக் கோமுறையை-எற்றும் வழுமாமல் செய்துவரும் மன்னவனைத் தெய்வம் கழுவாமல் காத்துவரும் கன்கு. (*) இ-ள் கான் பெற்ற அருமை மகனே ஆலுைம் பிழை செய்தால் அவனை உடனே கண்டித்து அடக்கி அரசமுறைபுரியும் விழுமிய வேந்தனைத் தெய்வம் எவ்வழியும் செவ்வையாக் காத்து வரும்; அந்த ஆட்சி அதிசய மாட்சியாப் உயர்ந்து விளங்கும் என்க. நாடு காக்க நேர்ந்தவன் யாண்டும் நடுவு நிலைமை போடு நீதி புரிய வேண்டும் என்பதை இது ஈண்டு உணர்த்தி யுள்ளது. உயர்ந்த மேன்மைகள் யாவும் சிறந்த செயல்களால் விளைந்து வருகின்றன. ஒருவனுடையதன்மையைக்கொண்டேசன்மைகள் அளக்கப் படுகின்றன. தனது கருமம் கருமநீதிகள் தழுவிவரின் அவன் எவன யிருந்தாலும் உலகம் அவனே உயர் குல வேந்தன உவந்து புகழ்ந்து யாண்டும் வியந்து கொண்டாடுகின்றது. ககந்தன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து அரசு புரிக்கான். அரசுக்கு இவன் நேரான வாரிசு அல்லன்; ஆயினும் நாட்டை மிகவும் நீதிமுறையோடு பாதுகாத்து வந்தான். இராச தானியான அந்த நகரம் இவனுடைய பெயர் உரிமை போடு காகந்தி என வழங்க நேர்ந்தது. இவனது ஆட்சித் திறம் மாட்சி மிகுந்து நின்றது. குற்றம் குறைகள் யாண்டும் யாரிடமும் நேராதவாறு ஒர்ந்து இவன் ஆண்டு வங்கமையால் உயர் புகழ் நீண்டு வந்தது. அவ்வாறு வருங்கால் மருதி என்னும் ஒரு தருண மங்கையை இவனுடைய மகன் காதலித்தான்; சமையம் பார்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/313&oldid=1327710" இலிருந்து மீள்விக்கப்பட்டது