பக்கம்:தரும தீபிகை 6.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2140 த ரும தீ பி. கை தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கொல் அரசர்க்குரிய (தொல்காப்பியம்) மன்னனுக்கு உரிய மரியாதை அடையாளங்கள் இன்ன வாறு இசைக்து கின்றன. இந்த இராச சின்னங்கள் யாவும் காரணங்களோடு அமைந்துள்ளன. சீவர்களுக்கு இதமாய் வெண்ணிலவை விரித்துச் சந்திரன் தண்ணளிசெய்தல்போல் தன் நாட்டில் வாழும் குடிகளுக்கு கலமாய் அருள் சுரந்து அரசன் யாண்டும்ஆதரவு புரிபவன் என்பதைக் குடை விளக்கி கின்றது. “உயர்ந்து ஒங்கு உச்சி உவாமதி போல கிவந்து ஒங்கு வெண்குடை மண்ணகம்கிழற்செய வேலும் கோலும் அருட்கண் விழிக்க தீதின்று உருள்கநீ ஏங்திய திகிரி கினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம் மனக்கினி தாக வாழிய வேந்தே' (மணிமேகலை, 22) நெடுமுடிக்கிள்ளி என்னும் மன்னனை நோக்கி முனிவர் இன்னவாறு துதித்துள்ளார். வேந்தே கின் குடை பூரண சந்தி ரன் போல் உலகம் மகிழ நிழல் செய்க என அவர் வாழ்த்தி யிருப்பது குடையின் இனிய இயல்பை உணர்த்தி நின்றது. திங்களேப் போற்றுதும் திங்களேப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னிகுளிர்வெண்குடைபோன்று.இவ் அங்கண் உலகு அளித்தலான். (சிலப்பதிகாரம்) சோழ மன்னன் குடைபோல் உலகுக்கு இகம் செய்த லால் திங்களை யாம் போற்றுதும் என இளங்கோவடிகள் இங் வனம் பாடியிருக்கிரு.ர். அரசின் கண்ணளி அறிய வந்தது. உலகுடன் கிழற்றிய தொலேயா வெண்குடைக் கடல்போல் தானேக் கலிமா வழு தி. (அகம், 204) கின்குடை வெயில் மறைக் கொண்டன்றே வருந்திய குடி மறைப்பதுவே கூர்வேல் வளவ! (புறம், 55) வெயிலழல் கவியாது வியலக வரைப்பின் உயிரழல் கவிக்கும் உயர்ச்சித் தாகிப் பூந்தார் அணிந்த ஏந்தல் வெண்குடை. (பெருங்கதை1-42) அரசர் குடை வெயிலுக்காக அன்று; உயிர்கள் துயர் உரு வகை காத்தருளுவதற்கு அறிகுறியாகவே அமைந்தது என்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/317&oldid=1327714" இலிருந்து மீள்விக்கப்பட்டது